மானத்தை வாங்கிய ஹைதராபாத்.. குப்பை நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நகரம்.. உலகளாவிய சர்வே ரிசல்ட்
ஹைதராபாத்: உலகிலேயே அசுத்தமாக குப்பை நகரமாக இருக்கும் சிட்டிகளின் பட்டியலில் நம் நாட்டின் ஹைதராபாத் 18 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய நகரம் ஹைதராபாத் தான் என்ற நிலையில் டாப் 5 இடங்களில் உள்ள சிட்டிகளின் பெயர் விவரம் வருமாறு:
குப்பை.. ஒவ்வொரு நகரங்களிலும் இருக்கும் பெரிய பிரச்சனை. குறிப்பாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பெரிய பெரிய நகரங்களில் தினமும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தி நகரை நன்றாக வைத்து கொள்வது என்பது பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில், தான் ‛ரேடிக்கல் ஸ்டோரேஜ்' (Radical Storage) சார்பில் உலகலாவிய அளவில் அசுத்தமான நகரங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. ‛ரேடிக்கல் ஸ்டோரேஜ்' என்பது சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் நிறுவனமாகும்.
உலகம் சுற்றி வரும் டிராவலர்களின் கொடுத்த ரிவ்யூ அடிப்படையில் நகரங்களின் பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. நகரில் நிலவும் சுத்தம், சுகாதாரம், சுற்றுலா தலங்களில் இருக்கும் மாசுபாகுபாடு ஆகியவற்றை அளவுகோலாக வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இந்தியாவில் இருந்து இடம்பிடித்த ஒரே நகரம் ஹைதராபாத் தான். தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக இருக்கும் ஹைதராபாத் உலகிலேயே அசுத்தமான நகரங்களின் பட்டியலில் 18 வது இடத்தை பிடித்துள்ளதாக ரேடிக்கல் ஸ்டோரேஜ் தெரிவித்துள்ளது. மொத்தம் டாப் 20 நகரங்களின் பட்டியலில் கீழிருந்து 3வது இடத்தில் ஹைதராபாத் உள்ளது.
அதேபோல், இந்த பட்டியலில் முதலிடத்தில் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபஸ்ட், 2வது இடத்தில் இத்தாலி தலைநகர் ரோம், 3வது இடத்தில் அமெரிக்காவின் லாஸ் வேகஸ், 4வது இடத்தில் இத்தாலியின் புரோரன்ஸ் உள்ளது.
5வது இடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், 6வது இடத்தில் இத்தாலியின் மிலன் நகர், 7 வது இடத்தில் இத்தாலியின் வெரோனா, 8 வது இடத்தில் ஜெர்மனியின் ஃப்ரங்ஃப்ட், 9 வது இடத்தில் பெல்ஜியம் தலைநகர் புராசெல்ஸ், 10 வது இடத்தில் எகிப்து தலைநகர் கைரோ உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.இந்த நகரை ஒப்பிடும்போது ஹைதராபாத் 18 வது இடத்தில் இருந்தாலும் கூட லிஸ்ட் அசுத்தமான நகரங்களை மதிப்பீடு செய்வதாக உள்ளது. இதனால் இந்த லிஸ்ட்டில் ஹைதராபாத் இடம்பிடித்து இருப்பதே மோசமானதாகும்.
அதேபோல் இந்த சர்வேயில் மிகவும் சுத்தமான நகரங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் முதலிடத்தில் போலந்து நாட்டின் கிராக்வோக் உள்ளது. அதன்பிறகு 2வது இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜா, 3வது இடத்தில் சிங்கப்பூர், 4வது இடத்தில் போலந்து தலைநகர் வார்ஷா மற்றும் 5வது இடத்தில் கத்தார் தலைநகர் தோஹோ ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications