அரசு குருகுல பாடசாலையில்.. பொத் பொத்தென கீழே விழுந்த மாணவிகள்.. யாரிந்த முதல்வர்? ஒரே பரபரப்பு
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள் வரை, சம்பந்தப்பட்ட பள்ளியை கடுமையாக கண்டித்தும், நடவடிக்கையை கோரியும் வருகிறார்கள்.. அந்த பள்ளியின் மாணவிகளுக்கு என்ன நடந்தது?
மாணவர்கள் சரியாக படிக்காவிட்டால், அல்லது ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், தோப்புக்கரணம் செய்ய வைப்பது பள்ளிகளில் வழக்கமாக இருந்து வருகிறது. அப்படித்தான் ஆந்திராவிலுள்ள பள்ளியிலும் தண்டனை தரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளதற்கு என்ன காரணம்?

பள்ளி ஆசிரியர்: ஆந்திர பிரதேசம் பள்ளி ஒன்றில், மாணவிகள் சிலர் ஒழுங்காக படிப்பதில்லை என்றும், தங்களது உத்தரவுக்கு கீழ்படிய மறுக்கிறார்கள் என்றும், ஆசிரியர்கள் சிலர், தலைமை ஆசிரியரிடம் புகார்களை கொண்டு சென்றனர்.
இதனையடுத்து, பள்ளி முதல்வர் சம்பந்தப்பட்ட மாணவிகளை அழைத்து அவர்களுக்கு தண்டனை வழங்கியிருக்கிறார்.. அதாவது, 3 நாட்களுக்கு, தொடர்ந்து 200 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.
மாணவிகள்: மாணவிகளும் தோப்புக்கரணம் போட முயன்றுள்ளார்.. ஆனால், மாணவிகளால் 200 தோப்புக்கரணம் போட முடியவில்லை.. இதனால், கால் வலியால் திணறினார்கள்.. அப்போதுகூட தலைமை ஆசிரியர் மனமிரங்காமல், கட்டாயம் தோப்புக்கரணம் போட வேண்டும் என்று சொன்னார்.. இதனால், மீண்டும் மாணவிகள் தோப்புக்கரணம் போட்டபோது, ஒவ்வொருவரின் உடல்நிலையும் மிகவும் மோசம் அடைந்தது.. சிலர் கால்கள் வீங்கியபடி கதற துவங்கினார்கள்.
அப்போதும் தண்டனையை அந்த தலைமை ஆசிரியர் நிறுத்தவில்லையாம்.. இறுதியில், கிட்டத்தட்ட 50 மாணவிகள் அங்கேயே பொத் பொத்தென்று மயங்கி, சரிந்து கீழே விழுந்திருக்கிறார்கள்.. மாணவிகள் மொத்தமாக இப்படி விழுந்துவிட்டதால், பதறிப்போன மற்ற ஆசிரியர்கள் உடனடியாக, மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தந்தனர்.

அதிர்ச்சி: அத்துடன், மாணவிகள் அனைவரையும் அருகிலுள்ள மருத்துவமனையிலும் கொண்டு சென்று அனுமதித்தனர்.. பெற்றோர்கள் பதறிப்போய் மருத்துவமனைக்கு வரவும், இதற்கு பிறகுதான், இந்த விவகாரமே பூதாகரமாக வெடித்து கிளம்பிவிட்டது.. இறுதியில், ரம்பச்சோதவரம் எம்எல்ஏ மிரியாலா ஸ்ரீசிரிஷ்யதேவிக்கு விஷயம் பறந்துள்ளது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ, "மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனை மனித தன்மையற்றது.. ஒழுங்கீனம் என்பதற்காக இப்படி ஒரு தண்டனையை தரவேண்டிய அவசியமே இல்லை... இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications