ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கு.. துப்பு துலங்க உதவிய வீடியோ வெளியீடு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை..!

    ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவிய வீடியோ தற்பேது வெளியாகியுள்ளது.

    இந்த வீடியோதான் கொலையாளிகள் யார் என்பதை போலீஸாருக்கு காட்டியது. இந்த ஒற்றை வீடியோதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க உதவியதாக கருதப்படுகிறது.

    ஹைதராபாத்தில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப வந்த பெண் மருத்துவரின் வாகனத்தை அங்கிருந்த லாரி டிரைவர்கள் வேண்டுமென்றே பஞ்சர் செய்து விட்டு அந்த பெண்ணை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்து விட்டனர்.

    சிசிடிவி காட்சிகள்

    சிசிடிவி காட்சிகள்

    இந்த அனைத்து விவகாரத்தையும் சிசிடிவி பதிவு செய்யவில்லை. எனினும் அந்த லாரி டோல்கேட்டிலிருந்து வெளியே சென்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. போலீஸாரின் விசாரணையின் படி அந்த லாரியில் அந்த பெண் மயக்க நிலையில் இருந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    கைது

    கைது

    இந்த சிசிடிவி காட்சிகள்தான் மிகவும் முக்கியமானவை. இவைதான் போலீஸாருக்கு துப்பு துலங்க உதவியது. மேலும் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளை கைது செய்யவும் உதவியது.

    சொந்தம்

    சொந்தம்

    இந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் டோல்கேட்டுக்கு சென்று அங்கு அவ்வழியாக சென்ற லாரியின் பதிவு எண்ணை பெற்றனர். மேலும் அந்த லாரி ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த சீனிவாச ரெட்டிக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    தேசிய நெடுஞ்சாலை

    தேசிய நெடுஞ்சாலை

    பின்னர் ரெட்டியை அணுகிய போலீஸார் அந்த லாரியை அந்த நேரத்தில் இயக்கியது சென்னகேசவலு மற்றும் முகமது ஆரிப் என தெரிந்து கொண்டனர். டோல்கேட்டிலிருந்து சென்ற அந்த 4 பேரும் தேசிய நெடுஞ்சாலை 44-இல் ஒரு பெட்ரோல் பங்கில் கேனில் பாட்டிலில் வாங்கியுள்ளனர்.

    4 பேரின் முகம்

    4 பேரின் முகம்

    முதலில் ஒரு பெட்ரோல் பங்குக்கு சென்று இந்த 4 பேரும் பாட்டிலில் பெட்ரோல் கேட்டதற்கு அவர்கள் தர மறுத்தனர். எனினும் லாரியில் வந்தவர்களுக்கு பெட்ரோல் எதற்கு என்ற சந்தேகத்துடன் அந்த நால்வரையும் சிறிது தூரம் பெட்ரோல் பங்க் ஊழியர் பின்தொடர்ந்துள்ளனர். இதையடுத்து வேறு பெட்ரோல் பங்கில் பெட்ரோலை வாங்கி அந்த பெண்ணை எரித்துள்ளனர். தகவலறிந்த பின்னர் இந்த ஊழியர் போலீஸாரை அழைத்து 4 பேரில் ஒருவரின் முகத்தை வரைய உதவி செய்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+