பிரதமரை வரவேற்காத கேசிஆர்! யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்ற போது வந்த அறிவிப்பு! அமலாக்கத்துறையின் அதிரடி!
ஹைதராபாத் : பண மோசடி வழக்கில் மதுகோன் குழும நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள், விளம்பரதாரர்களுக்கு சொந்தமான சுமார் 96 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்க துறை அதிகாரிகள் முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அவரை வரவேற்க தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி தலைவருமான சந்திரசேகர ராவ் செல்லவில்லை.
இதற்கு முன்னும் பிரதமரை அவர் வரவேற்காத நிலையில் மூன்றாவது முறையாக பிரதமர் வரவேற்பை அவர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

சந்திரசேகர ராவ்
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள எஸ்வந்த் சின்ஹா நேற்று தெலுங்கானா மாநிலத்திற்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேகம்பேட் விமான நிலையம் சென்றார். அவருடன் மதுகோன் குழுமத்தின் விளம்பரதாரரும் எம்பியுமான நாகேஸ்வரராவ் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

சொத்துக்கள் முடக்கம்
அப்போதுதான் மது கோன் குழும நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் விளம்பரர்களுக்கு சொந்தமான 96.28 கோடி ரூபாய் மதிப்பிலான 105 அசையா மற்றும் பிற சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி மதுகோன் குழுமத்தின் ராஞ்சி எக்ஸ்பிரஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக பண மோசடி தடுப்பு சட்டம் (பிஎம்எல்ஏ) 2002 கீழ் வங்கி மோசடி தொடர்பான நடவடிக்கை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை அதிரடி
ஹைதராபாத் மேற்குவங்கம் ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் பிரகாசம் கிருஷ்ணா மாவட்டங்களில் சுமார் 88.85 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் மதுகோன் ப்ராஜெக்ட் லிமிடெட் நிறுவனத்தின் விளம்பரர்களின் பங்குகள் உட்பட 7.36 கோடி மதிப்புள்ள அவசியம் சொத்துக்கள் என மொத்தம் 96.28 கோடி ரூபாய்க்கு அடையாளம் காணப்பட்டுள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video

அரசிய பழிவாங்கல்
அதே நேரத்தில் இது அரசியல் பலுவாங்கும் நடவடிக்கை தான் இதை நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தோம். சட்டப்படி இதனை எதிர்கொள்வோம் என நாகேஸ்வரர் தரப்பு கூறியுள்ளது. கடந்த சில நாட்களாகவே எதிர்கட்சிகளை முடக்கும் வகையில் விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications