குட் நியூஸ்.. இந்தியா வந்தடைந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்.. தட்டுப்பாடு விரைவில் சரியாகும்?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ரஷ்யாவில் இருந்து சுமார் 1.5 லட்சம் தடுப்பூசிகள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன.

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையான் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக நான்கு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

1.5 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்

1.5 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ரஷ்யாவிலிருந்து சுமார் 1.5 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் சற்று நேரத்திற்கு முன் இந்தியா வந்தடைந்தன. ரஷ்யாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தத் தடுப்பூசிகள் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டன. விரைவில் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஒப்புதலுக்காக இவை அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி எப்போது தொடங்கும்

உற்பத்தி எப்போது தொடங்கும்

மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுக்குப் பிறகு, இவை பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்த மாதம் மட்டும் மேலும் 30 லட்சம் தடுப்பூசிகள் இந்தியா வரவுள்ளன. இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை விநியோகிக்கும் பொறுப்பு ஹைதராபாத்திலுள்ள டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் அனைத்து தடுப்பூசிகளும் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் மூலமே விநியோகம் செய்யப்படும். மேலும், ஜூன் அல்லது ஜூலை மாத்திலிருந்து இந்தியாவிலேயே ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி

ஸ்புட்னிக் வி

ஸ்புட்னிக் வி இந்தியா தடுப்பூசி ரஷ்யா நாட்டு ஆரயாச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசியாகும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே ரஷ்யாவில் இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும், அப்போது சோதனை முடிவுகள் வெளியாகாததால் பல்வேறு நாடுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டினர். அதன் பின்னர், வெளியான ஆய்வுகளில் ஸ்புட்னிக் வி 91.6% வரை பலன் அளிப்பது தெரியவந்தது.

டாக்டர் ரெட்டீஸ்

டாக்டர் ரெட்டீஸ்

அப்போது முதலே பல்வேறு நாடுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டின. இந்தியாவில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவரசக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் தடுப்பூசிகளில், பாதி இந்தியாவில் பயன்படுத்தப்படும். மீதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

18+ அனைவருக்கும் தடுப்பூசி

18+ அனைவருக்கும் தடுப்பூசி

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசும் வேகப்படுத்தியுள்ளது. இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், நாட்டில் 6 மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை. ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டால், தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+