Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்தோ பரிதாபம்! தெலுங்கானா அரசியலில் காமெடி பீசாகிவிட்ட மாஜி புரட்சி பாடகர் கத்தார்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா அரசியலில் நடிகர் பவண் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக மாஜி புரட்சி பாடகரும் தனி கட்சி தொடங்கியவருமான கத்தார் அறிவித்துள்ளார். இருப்பினும் வாரம் ஒரு நிலைப்பாடு, நாள்தோறும் ஒரு அறிவிப்பு என வெளியிட்டு தெலுங்கானா அரசியலில் கோமாளி போல சித்தரிக்கப்படும் கத்தாரின் இந்த முடிவு எத்தனை நாளைக்கு என தெரியவில்லை என விமர்சிக்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

விட்டல் ராவ் எனும் கத்தார்... இந்திய மத்திய அரசை கிடுகிடுக்க வைத்த ஒரு பெயர்.. கறுப்பும் சிவப்புமாய் கலந்த அந்த கம்பளி போர்வையுடன் ஆங்காரமாய் ஒலித்த அந்த குரல் புதிய புதிய புரட்சியாளர்களை பிரசவித்துக் கொண்டே இருந்தது. நக்சல்பாரி எனும் ஆயுதம் தாங்கிய இடதுசாரி போராளிகளுக்கு துப்பாக்கிகளும் தோட்டாக்களும் எவ்வளவு முக்கியமோ அதைப் போல இணையான பங்களிப்பு செய்தது கத்தாரின் கர்ஜனை பாடல்கள்! அதனாலேயே நக்சல் இயக்கத்தின் அசைக்க முடியாத ஆகப் பெரும் சொத்தாக இருந்தவர் புரட்சிப் பாடகர் கத்தார்.

 Former Naxal Singer Gaddar try to get role in Telangana Politics

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது இயற்கை. காலம் கத்தாரையும் மாற்றியது. புரட்சியாளர் கத்தார் 2017-ல் புரட்சிகர அரசியலுக்கு குட்பை சொன்னார்... விசித்திரமாய் மழைவேண்டி, மக்கள் சுபிட்சம் வேண்டி ஆலயம் ஆலயமாக சென்றார்.. அப்படியே ஓட்டு அரசியலையும் ஏற்றுக் கொண்டார். தம் வாழ்நாளிலேயே முதல் முறையாக 2018-ம் ஆண்டுதான் ஓட்டுப் போட்டார் கத்தார். ஏனெனில் பாராளுமன்ற அரசியலை பன்றிகளின் தொழுவம் எனும் நக்சல்பாரி முழக்கத்தை மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கியவர்! கிறிஸ்தவ மத போதகரின் கட்சியில் இணைந்து தேர்தல் அரசியலி குதிக்க நினைத்தார். ஆனால் நடக்கவில்லை. இதன் பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு கட்சி, தலைவர் ஆதரவு என தினம் ஒரு அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து தெலுங்கானாவின் அரசியல் காமெடி நடிகராக விமர்சிக்கப்பட்டு வருகிறார் கத்தார். பின்னர் அம்பேத்கரிஸ்ட் எனவும் பிரகடனம் செய்தார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை வானளாவ புகழ்ந்தார். பிரதமர் மோடியின் கட்டத்தில் பங்கேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மேடையேறி சந்தித்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மேடையில் சந்தித்து ஆரத்தழுவி முத்தமழை பொழிந்தார். ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளாவை தெலுங்கானாவின் தாய் என்றார்.. சில வாரங்களுக்கு முன்னர் கத்தார் பிரஜா ராஜ் கட்சியையே தொடங்கினார். இப்போது பவண் கல்யாணின் ஜனசேனாவுடன் இணைந்து செயல்படப் போவதாக சொல்கிறார்.

புரட்சிகர வரலாற்றில் பெருநெருப்பாய் ஒளிவீசிய கத்தார் இன்று ஒரு அரசியல் காமெடியன் என்பதும் ஒரு வரலாறுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+