"கடமையை செய்யும் ஆளுநர்கள் மீது விமர்சனம் வைக்கின்றனர்".. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஆதங்கம்
ஹைதராபாத்: ஆளுநர்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள். தெலுங்கானா மாநில அரசு நெறிமுறையின்படி இல்லை. தெலுங்கானா அரசு ஏன் நெறிமுறைகளை மீறுகிறது என்று கேளுங்கள் எனத் தெரிவித்துள்ள ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எதற்கும் முரண்படாமல் கடமையை மட்டும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிககள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றன.
டெல்லி தொடங்கி தமிழ்நாடு வரையிலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மநிலங்களில் ஆளுநர் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் எழாமல் இல்லை. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்படுவதாகவும் விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.

பாஜக ஆளாத மாநிலங்களில்..
குறிப்பாக தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் மற்றும் டெல்லி, கேரளா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர்கள் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்தனர். இது நாடு முழுவதும் கவனம் பெற்றது.

ஆளுநர்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள்
இந்த நிலையில், தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- ஆளுநர்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள். தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் மட்டும் ஆளுநருக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன். தெலுங்கானா அரசு நெறிமுறைகளை ஏன் மீறுகிறது என்று கேளுங்கள். எதற்கும் முரண்பாடு இன்றி கடமையை செய்து வருகிறேன்.

நாற்காலிக்கு மதிப்பளிக்க வேண்டும்
சில மசோதாக்கள் என்னிடம் நிலுவையில் இருக்கின்றன. நான் அவற்றை மதிப்பீடு செய்து ஆய்வு செய்து வருகிறேன். ஆனால் அரசாங்கம் நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. குடியரசு தின விழாவை நடத்துவது தொடர்பாக மாநில அரசிடம் இருது இதுவரை எந்த தகவலும் வரவில்லை. அரசியல் சாசன பதவிக்கும் ஆளுநர் நாற்காலிக்கும் மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வரம்புகளை மீறவில்லை
ஆளுநருக்கு ஏன் உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. தெலுங்கானா அரசு ஏன் நெறிமுறைகளின் படி செயல்படுவதில்லை என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நான் மீண்டும் மீண்டும் வைக்கிறேன். இந்த கேள்விக்கு பதில் அளித்தால் மற்ற அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் அளிப்பேன். ஆளுநர் தனது வரம்புகளை மீறவில்லை. ஆளுநருக்கு எதிராக முதல்வர்கள் கருத்து கூறுகின்றனர். நான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன். எப்படி செயல்பட வேண்டும் என எனக்கு சிலர் சொல்ல தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்து வேறுபாடு
தெலங்கானாவில் சந்திரசேர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை தீவிரமாக எடுத்துள்ள சந்திர சேகர் ராவ் மத்திய அரசுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இந்தச் சூழலில், ஆளுநர் தமிழிசைக்கும் முதல்வர் சந்திரசேர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, மோதல் போக்கு உள்ளது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உரிய மரியாதையை மாநில அரசு வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு ஆளுநர் தரப்பிலிருந்து பல மாதங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications