"உறுப்பை" அறுத்து.. தலையை சீவி, விரலை வெட்டி.. இதயத்தை வெளியே எடுத்து.. வீடியோ வேற.. மயங்கிய காதலி
இளைஞரை கொன்று, உடல் உறுப்புகளை வெளியே எடுத்து வீசியெறிந்துள்ளார் அவரது உயிர்நண்பன்
ஹைதராபாத்: நண்பனை மிக மிக கொடூரமாக கொன்ற விவகாரம் குறித்து, தெலுங்கானா போலீசார் தொடர் விசாரணை நடத்திவரும் நிலையில், அந்த பயங்கரம் குறித்து வேறு சில தகவல்களும் வெளியாகி பதற வைத்து வருகின்றன.
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் சிரிகனகண்ட்லா மண்டலத்தில் உள்ளது கோட்ரதாண்டா என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் நவீன்.. இவருக்கு 22 வயதாகிறது.
நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார்... இவரது நண்பர் ஹரி கிருஷ்ணா.. அவருக்கும் 22 வயதாகிறது..

ஒரே காலேஜ்
அவரும் பீர்ஜாதிகுடாவில் உள்ள அரோரா பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.. இவர்கள் 2 பேருமே இன்டர்மீடியட் வரை நவீன், ஹரிகிருஷ்ணா ஒன்றாகவே படித்தவர்கள்.. 2 பேருமே இன்ஜினியரிங் படிப்பதற்காக வேறு, வேறு காலேஜ்களில் சேர்ந்தனர்.. கடைசியில், 2 பேருமே ஒரே மாணவியை காதலிக்கவும் துவங்கிவிட்டனர்.. வெவ்வேறு காலேஜ்களில் படித்து வந்தாலும், விடாமல் தொடர்ந்து வந்த நட்பில், இந்த காதல் விவகாரம் விரிசலை தர துவங்கியது.

அல்டிமேட் பிளான்
தன்னுடைய காதலி, நவீனுடன் நெருங்கி பழகுவதை ஹரிகிருஷ்ணா விரும்பவில்லை.. அதனால், காதலியை கண்டிக்காமல், நவீனை கொலை செய்ய திட்டமிட்டார் ஹரிகிருஷ்ணா.. இதற்காக, கடந்த 17ம் தேதி நவீனுக்கு போன் செய்த ஹரிகிருஷ்ணா, ஒரு பார்ட்டி இருப்பதாகவும், அப்துல்லாபூர்மேட் புறநகர் சுற்று சாலைக்கு வந்துவிடுமாறும் சொன்னார்.. பார்ட்டி என்று நண்பன் கூப்பிட்டதால், நவீனும் கிளம்பி வந்தார்.. அந்த அப்துல்லாபூர்மேட் புறநகர் பகுதியாம்.. ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத பகுதியும் கூட.. அந்த இடத்துக்கு நவீனை அழைத்து சென்ற ஹரிகிருஷ்ணா, திடீரென கத்தியால் அவரை குத்தி கொன்றுவிட்டார்.

கிளவுஸ் விரல்கள்
ஏற்கனவே கொலை செய்யும் திட்டத்துடன் வந்திருந்ததால், கத்தி, கையில் கிளவுஸ் என தயாராகவே வந்தாராம் ஹரிகிருஷ்ணா.. கிளவுஸை கையில் மாட்டிக்கொண்டுதான், கத்தியால் நவீனை குத்தியுள்ளார்.. ரத்த வெள்ளத்தில் நவீன் சரிந்ததுமே, அவரது தலையை துண்டாக அறுத்து எடுத்துள்ளார்.. அப்போதும் ஆத்திரம் அடங்காமல் நவீனின் மர்ம உறுப்பை அறுத்து வீசியுள்ளார்.. அதற்கு பிறகு, தான் காதலிக்கும் பெண்ணை தொட்டு பேசியதால், ஆத்திரத்தில் இருந்த ஹரிகிருஷ்ணா, நவீனின் விரல்களையும் துண்டித்து உள்ளார்.. இது அத்தனையையும் வீடியோவாக எடுத்து அந்த காதலிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வயிற்றை கிழித்தார்
ஆனால் இந்த வீடியோவை பார்த்ததும் அந்த பெண் நம்பவில்லையாம்.. இதனால் இன்னும் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணா, நண்பனின் சடலத்தை வீடியோ எடுத்து அனுப்பியதாக தெரிகிறது.. அப்போதுதான் அந்த பெண் அதிர்ந்து மயங்கி உள்ளார்.. இவ்வளவும் செய்த ஹரிகிருஷ்ணாவுக்கு, ஆவேசம் குறையவே இல்லை.. மறுபடியும் சடலத்தின் வயிற்றை கிழித்து, அதன் வழியாக இதயத்தை வெளியே எடுத்துள்ளார்... மேலும் அவரது உதடுகளையும் துண்டாக அறுத்துள்ளார்.. கடைசியாக, மிச்சமீதி சடலத்தை, அங்கிருந்த முட்புதரில் வீசிவிட்டு, நேராக வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார்..

துண்டு உதடுகள்
இதனிடையே, 3 நாட்களாக மகனை காணவில்லை என்று நவீனின் பெற்றோர்கள் பரிதவித்து கொண்டிருந்தனர்.. எங்கெங்கோ தேடியும் கிடைக்காததால், போலீசுக்கு போனார்கள்.. இதையடுத்து போலீசாரும் நவீனின் செல்போனை ஆய்வு செய்தனர்.. இதில் கடைசியாக ஹரிகிருஷ்ணாவிடம் நவீன் பேசியது பதிவாகியிருந்தது. இதைவைத்துதான், சந்தேகத்தின் பேரில் ஹரிகிருஷ்ணாவை 2 நாட்களுக்கு முன்பு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்திருக்கிறார்கள். மொத்த உண்மையும் அப்போதுதான் தெரியவந்துள்ளது.. பிறகு, நண்பனின் சடலத்தை வீசிய இடத்தை போலீசாருக்கு அடையாளம் காட்டினார் ஹரி கிருஷ்ணா..

முக்கோண காதல்
அங்கு கிடந்த சடலத்தை மீட்ட போலீஸார், அதை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஹரிகிருஷ்ணாவிடமும் விசாரணை நடக்கிறது.. இந்த கொலையை ஹரிகிருஷ்ணா மட்டும் செய்தாரா? அல்லது யாராவது அவருக்கு உதவினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.. மேலும் அந்த காதலியிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்த நண்பர்கள் 2 பேருமே 11, 12ம் வகுப்புகளை ஒன்றாக படித்து, கல்லூரியிலும் ஒரே வகுப்பில் படித்து முடித்திருக்கிறார்கள்.. அப்போதுதான், அந்த காதலியும் இவர்களுடனேயே ஒரே வகுப்பில் படித்துள்ளார்.. மாணவி மீது அப்போதே 2 பேருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது... நவீன்தான் அந்த பெண்ணிடம் தன்னுடைய காதலை முதலில் சொன்னாராம்..

பிரேக்-அப்
அந்த பெண்ணும் நவீனின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.. 2 வருடமாக இவர்களின் காதலும் வளர்ந்துள்ளது.. பிறகு, இந்த காதலர்களுக்கு கருத்து வேறுபாடு காரணமாக தகராறு வந்துள்ளது, இதனால் காதலும் பிரேக் அப் ஆகிவிட்டது. இந்த சூழலில்தான், ஹரிகிருஷ்ணா அந்த பெண்ணிடம் தன்னுடைய காதலை சொல்லி உள்ளார்.. அந்த காதலை, அந்த பெண்ணும் ஏற்றுக் கொண்டு, 2 பேருமே காதலிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், நவீன் அந்த பெண்ணுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.. ஒருமுறை தன்னுடைய காதலியுடன் ஹரிகிருஷ்ணா இருக்கும்போது, நவீனிடம் இருந்து போன் வந்ததாம்..

ஜூஸில் பாய்சன்
தன்னுடைய காதலியுடன் முன்னாள் காதலன் தொடர்ந்து பேசி வருவதை பொறுக்க முடியாமல், நவீனை கொலை செய்ய ஹரிகிருஷ்ணா பிளான் செய்தாராம்.. இந்த கொலை வீடியோவை காதலி பார்த்ததுமே, முதலில் ஏதோ பிராங்க் செய்கிறார் என்று நினைத்தாராம்.. அதற்கு பிறகுதான், அந்த பயங்கரம் தெரிந்து உறைந்து போயுள்ளார். ஜூஸில் பாய்சன் கலந்து கொல்வது, துண்டு துண்டாக உடல்பாகங்களை வெட்டி ப்ரிட்ஜில் வைத்து பதற வைப்பது போன்ற கொலைகளால் நாடே கதிகலங்கி கொண்டிருக்கும்போது, நண்பனின் வயிற்றை கிழித்து உள்ளே கையைவிட்டு, இதயத்தை பிடுங்கி வெளியே எடுத்திருக்கிறார் என்றால், இந்த 22 வயது இளைஞருக்கு "இதயம்" என்று ஒன்று இருக்கிறதா என்ன???

படுஸ்மார்ட்
இதே விவகாரத்தில் இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. தனக்கு நவீன் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக, ஹரிகிருஷ்ணாவிடம் புலம்பினாராம் அந்த காதலி.. எப்ப பார்த்தாலும் போன் செய்து, நவீன் டார்ச்சர் தருவதாகவும் சொல்லி உள்ளார்.. அந்த பெண் தந்த புகாரின்பேரில்தான் ஹரிகிருஷ்ணன் ஆத்திரமடைந்ததாக சொல்கிறார்கள்.. இந்த புகாரை அவர் கடந்த 6 மாத காலமாகவே சொல்லி வருகிறாராம்.. எனவே நவீனை கொல்வதற்காக, கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் திட்டமிட்டு வந்தாராம் ஹரிகிருஷ்ணன்.

க்ளைமேக்ஸ்
கடந்த 17ம் தேதி தான் நாள் குறித்துள்ளார்.. அன்றைய தினம் இருவருமே ஒன்றாக சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. பிறகு, மறுபடியும் ஹாஸ்டலில் கொண்டுபோய் விட்டு விடுவதாக சொல்லி, பைக்கில் நவீனை அழைத்து சென்றிருக்கிறார்.. வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு மறுபடியும் 2 பேரும் மது குடித்து இருக்கிறார்கள்... அப்போதுதான், காதலி விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது... இதில் ஆத்திரம் அடைந்த ஹரிகிருஷ்ணன், முன்பே எடுத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவீனை குத்தி கொன்றுள்ளார்.. இவ்வளவும் போலீஸ் வாக்குமூலத்தில் அவர் சொன்னதை கேட்டு, தெலுங்கானாவே ஆடிப்போய் கிடக்கிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications