ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ஆர்சி விவகாரத்தில் அமித் ஷா நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகிறார்.. ஓவைசி புகார்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் இரண்டும் ஒன்று தான் என்றும் அமித் ஷா நாட்டை தவறாக வழிநடத்துவதாகவும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டினார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வலுத்துள்ளது. இந்த போராட்டத்தை தணிக்கும் விதமாக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவருவது (என்ஆர்சி) குறித்து எந்த விவாதமும் அரசு இதுவரை நடத்தவில்லை என்றார்.

Home Minister amit shah is misleading the country over NRC, NPR: Owaisi

இதையடுத்து ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பேட்டி அளித்தார் அந்த பேட்டியில் அவர் கூறுகையில், " தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் (npr), தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (ncr) எந்த தொடர்பும் இல்லை.

பிரதமர் மோடி சொன்னது சரிதான். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) தொடர்பாக இதுவரை நாடாளுமன்றத்திலோ அல்லது எந்த விதமான விவாதமும் நடைபெற்றது இல்லை. அமைச்சரவையிலும் விவாதிக்கப்பட்டது இல்லை என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் பலத்த மழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கைதமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் பலத்த மழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை

இந்நிலையில் என்ஆர்சி விவகாரத்தில் உள்துறை அமித் ஷா நாட்டு மக்களை தவறாக வழி நடத்துவதாக ஓவைசி குற்றம்சாட்டி உள்ளார். என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் தொடர்பாக அரசாங்கத்தை விமர்சித்து பேசிய , ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாருதின் ஒவைசி, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகிய இரண்டு செயல்முறைகளும் ஒன்று தான் என்று கூறினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்றும் இதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

English summary
While criticising the government over NRC and NPR, AIMIM chief Asadudding Owaisi on Wednesday said the two processes are same. "Home Minister is misleading the country. All political parties will be together in protesting against this," he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X