"பேச மாட்டியாடா".. தவித்து போன பெண்.. மைத்துனர் அசரலயே.. அதுக்குனு இப்படியா.. அதென்ன "செருப்பு மாலை"

தெலுங்கானாவில் இளைஞரை கல்லால் அடித்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 2 இளைஞர்களின் உதவியோடு, மைத்துனரை கல்லாலேயே அடித்து கொன்றுள்ளார் ஒரு இளம்பெண்.. அவரிடம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள் போலீசார்.. என்ன நடந்தது தெலுங்கானாவில்?

தெலுங்கானா மாநிலம், மெஹபூபா பாத் மண்டலம், டோர்னக்கல் புறநகர் தாண்டா பகுதியை சேர்ந்தவர் ராஜு.. இவரது தம்பி பெயர் கோபி... இவருக்கு திருமணமாகிவிட்டது.. மனைவி பெயர் குமாரி.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் கோபி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. இதனால், குமாரி மட்டும் தன்னுடைய மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

 கள்ளத்தொடர்பு

கள்ளத்தொடர்பு

அப்போது கோபியின் அண்ணன் ராஜுடன், குமாரிக்கு திடீரென கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. ஆனால், இதில்,ராஜுவுக்கு உடன்பாடு இல்லை என தெரிகிறது.. இதெல்லாம் தவறான உறவு என்று தம்பி மனைவியிடம் சொல்லி வந்தாராம்.. ஆனாலும், ராஜுவின் அறிவுரையை பொருட்படுத்தாத குமாரி, ராஜுவுடன் நெருங்கி வந்துள்ளார்.. அத்துடன் தன்னுடைய ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று அடிக்கடி தொந்தரவு தந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜு, இந்த கள்ளத்தொடர்புக்கு மறுப்பு தெரிவித்து கறாராக பேசிவிட்டார்.. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது..

 கொலைவெறி

கொலைவெறி

இவ்வளவு தொந்தரவு செய்தும், தன்னுடைய ஆசையை நிறைவேற்ற மறுத்த மைத்துனர் மீது ஆவேசம் அடைந்தார் குமாரி.. அதனால், மைத்துனரை கொலை செய்துவிடுவது என்று முடிவுக்கு வந்தார்.. இதற்காகவே 2 இளைஞர்களை சந்தித்து பேசி, கொலை செய்வதற்கு ஒரு நாளையும் குறித்தார்.. அதன்படி, சம்பவத்தன்று 2 இளைஞர்களை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.. அப்போது ராஜூ வீட்டில் தூங்கி கொண்டிருந்தாராம்.. இளைஞர்களை உள்ளே அழைத்து சென்று, தூங்கிக்கொண்டிருந்த ராஜுவை கல்லாலேயே அடித்து கொன்றுள்ளனர்.. இதில் ரத்த வெள்ளத்தில் நசுங்கி இறந்துவிட்டார் ராஜூ.

 செருப்பு மாலை

செருப்பு மாலை

அதற்கு பிறகு, அதே இளைஞர்கள் உதவியுடன் ராஜுவின் சடலத்தை எடுத்து வந்து, ஒரு மறைவிடத்தில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குள் இருந்துள்ளார் குமாரி.. இதனிடையே, வீட்டில் இருந்த ராஜூ, திடீரென காணாமல் போனதால் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் வந்தது.. உடனே, அக்கம்பக்கத்தினருக்கு இந்த விஷயத்தை சொல்லவும், அனைவருக்கும் சந்தேகம் குமாரி மீதுதான் திரும்பியது.. பின்னர் ஊர் மக்கள் பஞ்சாயத்து கூட்டினார்கள்.. குமாரியை நிற்கவைத்து விசாரணையும் நடத்தினர்.. முதலில் மறுத்த குமாரி, பஞ்சாயத்தாரரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை சொல்லிவிட்டார்.

 கக்கிய சீக்ரெட்

கக்கிய சீக்ரெட்

ஆசைக்கு இணங்க மறுத்ததால்தான், மைத்துனரை, 2 இளைஞர்கள் உதவியுடன் கல்லால் தாக்கி கொன்றதாக வாக்குமூலம் தந்துள்ளார்.. இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குமாரியை, பஞ்சாயத்துலயே வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்... பிறகு கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர்... இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரியை கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த 2 இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை இளம்பெண்ணே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+