தெலுங்கானாவில் ஓவைசிக்கு ஷாக்! சர்வேவை கவனிச்சீங்களா? அடிச்சு தூக்கிய காங்கிரஸ்! இதுதான் விஷயமே
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாம் கிட்டத்தட்ட உறுதியாக சொல்கின்றன. இதில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒவைசியின் கட்சி எத்தனை இடங்களை பிடிக்கும் என்ற ஆர்வம் பலரிடையே எழுந்துள்ளது.
இஸ்லாமியர்களுக்கு என்று தனிப்பட்ட வலுவான கட்சிகள் இந்தியாவில் குறைவாகவே உள்ளன. இதன் காரணமாக ஒவ்வொரு தனிப்பட்ட கட்சிகளும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு இஸ்லாமியர்.. இஸ்லாமிய கட்சி அல்லாத பொதுவான கட்சி ஒன்றில் போட்டியிட்டு வெல்வது வேறு. இஸ்லாமிய கட்சியில் இருந்தே போட்டியிட்டு வெல்வது வேறு.

இஸ்லாமிய கட்சி மூலமே ஒரு வேட்பாளர் போட்டியிட்டு வெல்லும் பட்சத்தில்.. அவர் தனது உரிமைகளை இன்னும் வலிமையாக கேட்க முடியும். கட்சி கொள்கை பற்றி யோசிக்காமல் இன்னும் தங்கள் பிரிவினருக்காக குரல் கொடுக்க முடியும். ஒவைசி போன்ற அரசியல் தலைவர்களின் முக்கியத்துவம் இங்குதான் அதிகம் ஆகிறது.
வாக்குகள் பிரியும்: ஆனால் அதே சமயம்.. இஸ்லாமிய கட்சிகள் என்று இல்லாமல்.. ஒரே நோக்கம் கொண்ட கட்சிகள் தனி தனியாக பிரிந்து போட்டியிட்டால் வாக்குகள் பிரியும் என்ற அச்சமும் பலர் இடையே உள்ளது. உதாரணமாக ஓவைசி அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
பெரிய கட்சிகளை எப்போதும் நம்பி இல்லாமல் இஸ்லாமியர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதே இவரின் நோக்கம் என்று ஒரு சாரார் வாதம் வைக்கின்றனர். இவர் காங்கிரசு உடன் கூட்டணி வைக்காமல்.. வாக்குகளை பிரிக்கிறார். இதனால் பாஜக வெல்கிறது. பாஜகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுகிறார் என்று இன்னொரு சாரர் வாதம் வைக்கின்றனர்.
இரண்டு வாதங்கள்: ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போதும் இந்த இரண்டு வாதங்களும் அதிக கவனம் பெறும். இந்த முறையும் 5 மாநில தேர்தல்களில் இந்த விவாதம் எழுந்துள்ளது. இதில் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி இருக்கும் தெலுங்கானாவில் இந்த முறை தேர்தல் நடந்துள்ளதால் அந்த விவாதம் உச்சம் பெற்றுள்ளது.
தெலுங்கானா தேர்தல்: 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானா தேர்தல் நேற்று நடந்தது.
இதையடுத்து வருகின்றன டிசம்பர் 3ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன. அதற்கு முன் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் கூறியுள்ளன.
கே சந்திர சேகர ராவின் பிஆர்எஸ் 44-50 இடங்களை வெல்லும், காங்கிரஸ் 56-62 இடங்களை வெல்லும், பாஜக 5-7 இடங்களில் வெல்லும். என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். அங்கே உள்ள 119 இடங்களில் 60 இடங்களில் மெஜாரிட்டி பெற வெல்ல வேண்டும்.
ஓவைசி கட்சி: : தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கள் கணிப்புகள் எல்லாம் கிட்டத்தட்ட உறுதியாக சொல்கின்றன. இதில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒவைசியின் கட்சி எத்தனை இடங்களை பிடிக்கும் என்ற ஆர்வம் பலரிடையே எழுந்துள்ளது.
மொத்த கணிப்புப்படி ஓவைசி கட்சி 6-7 இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த அங்கே ஓவைசி கட்சி 7 இடங்களை பிடித்தது. அதே இடங்களை மீண்டும் பிடிக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் கடந்த முறை 7 இடங்களை வென்ற காங்கிரஸ் இந்த முறை 62 இடங்கள் வரை வெல்லும் என்று கணிப்புகள் கூறுகின்றன,
இந்த கணிப்புகள் மூலம்.. 1. ஓவைசி வாக்குகளை பிரிக்கவில்லை என்பது ஊர்ஜிதம் ஆகிறது. 2. காங்கிரசுக்கு செல்லும் வாக்குகளை பிரித்து பாஜக வெல்ல அவர் காரணமாக இருப்பது இல்லை என்பது தெளிவாகிறது (குறைந்த பட்சம் தெலுங்கானாவில் மட்டுமாவது). 3. அரசியல் ரீதியாக இது ஓவைசி மீதான புகாரை நீக்கி உள்ளது. ஆனால் தேர்தல் ரீதியாக அவர் வலிமை இழந்துள்ளார் .. அவருக்கான ஆதரவு குறைந்துள்ளது அல்லது அதிகரிக்கவில்லை என்பதையே இந்த கருத்து கணிப்புகள் காட்டுகின்றது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications