குரங்குகளை சாதாரணமா நினைக்காதீங்க.. கும்பலாக வந்து தாக்கிய குரங்குகள்.. பறிபோன பெண்ணின் உயிர்
ஹைதராபாத்தில் பெண் ஒருவரைக் கும்பலாகக் குரங்குகள் தாக்கியுள்ளது.
ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் 70 வயதான மூதாட்டி ஒருவரைக் குரங்குகள் கூட்டமாக வந்து தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நவீனக் காலத்தில் காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மனிதர்கள் காடுகளையும் கூட அழிந்து அங்குக் குடியேறி வருகின்றனர். இதனால் மனித மிருக மோதல் அதிகரித்தே வருகிறது.
ஊருக்குள் யானை, சிறுத்தை வரும் சம்பவங்கள் முன்பு அரிதாகவே நடந்த நிலையில், இப்போது அவை பரவலாக நடத்தத் தொடங்கிவிட்டன. வனப்பகுதிகள் சுருங்கி வருவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

மனித மிருக மோதல்
மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுபோன்ற மனித மிருக மோதல்கள் அதிகரித்தே வருகிறது.. பெரும்பாலும் இதுபோன்ற நேரங்களில் மனிதர்களின் உயிர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. நம்மிடம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு சென்றுவிடும். நமது தமிழ்நாட்டில் எப்படி யானைகள் குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது உள்ளே புகுந்து விடுகிறதோ.. அதேபோல மற்ற மாநிலங்களில் வனத்தை ஓட்டியுள்ள பகுதிகளில் குரங்குகள் உள்ளே நுழைந்து விடும்.

தெலங்கானாவில் ஷாக்
பொதுவாகக் குடியிருப்புகளில் நுழையும் குரங்குகள் ரொம்பவே ஆக்ரோஷமாக இருக்கும்.. இதுபோல நுழையும் குரங்குகளால் சில நேரங்களில் மோசமான தாக்குதல் சம்பவங்கள் நடந்து விடுகின்றனர். இப்போது தெலங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது. அங்கு 70 வயதான மூதாட்டி ஒருவரைக் குரங்குகள் கூட்டமாக வந்து தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்

குரங்கு தாக்குதல்
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். குரங்குகளால் தாக்கியதால் உயிரிழந்தவர் சதரபோயின நர்சவ்வா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ராமரெட்டி கிராமத்தில் வசித்து வந்த 70 வயதான நர்சவ்வா, தனது மகளுடன் இயற்கை உபாதைக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சில குரங்குகள் ஆக்ரோஷமாகப் பாய்ந்து தாக்கியுள்ளன.

உயிரிழப்பு
அந்த குரங்குகளிடம் இருந்து தப்பிக்க அவர் ஓட முயன்ற நிலையில், அப்போது எதிர்பாராத விதமாக அவர், வழுக்கி விழுந்தார். இதனால் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். குரங்குகள் தாக்கியதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விளக்கம்
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "குரங்குகள் அவரை தாக்கியுள்ளது. குரங்கு தாக்குதலில் இருந்து அவர் தப்ப முயன்ற போது, தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் மிக மோசமான காயம் ஏற்பட்ட நிலையில், இதனால் உயிரிழந்தார். குரங்குகள் அவரை கடிக்கவில்லை.. இந்த விவகாரத்தில் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. இதனால் நாங்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை.. இருப்பினும், இந்த விவகாரத்தில் அவரது குடும்பத்திடம் சில குறிப்பிட்ட தகவல்களைக் கேட்டுள்ளோம்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications