ஆசை ஆசையா கிட்ட போன நபர்.. லோகேஷ் டக்குனு செய்த வேலைய பாருங்க.. வீடியோ வேற.. பின்னாலயே வந்த "ஆக்ஷன்"
சந்திரபாபு நாயுடு மகனுக்கு கை கொடுத்த அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது
ஹைதராபாத்: சந்திரபாபு நாயுடு மகனை நேரில் பார்த்ததுமே, அரசு பஸ் டிரைவர் ஒருவர் திக்குமுக்காடி போய்விட்டார்.. ஆனால், இதுவே அவரது சஸ்பெண்ட்டுக்கும் காரணமாகி விட்டது. என்ன நடந்தது ஆந்திராவில்?
ஆந்திராவுக்கு மறுபடியும் 2024ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது... இதற்கு இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில், தெலுங்கு தேசம், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
அந்தவகையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் குறைபாடுகளை ஒருவர்மீது ஒருவர் சுட்டிக்காட்டி, விமர்சனங்களை முன்வைத்து, பரபரப்பை கிளப்பி வருகின்றன.. எனவே, ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டம், ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திடீர் தடை
தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும், தன்னுடைய தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறார்.. சமீபத்தில் இவரது குண்டூர் மற்றும் நெல்லூர் பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.. இது அந்தமாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதையடுத்து பொதுக்கூட்டங்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி அரசு தடை விதித்தது.. இந்நிலையில், குண்டூரில் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு கைத்தறி புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்திருந்தனர்.

2 பரிதாபங்கள்
இந்நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு சில பெண்களுக்கு புடவைகள் வழங்கினார்... பிறகு, அந்த விழாவிலிருந்து கிளம்பி சென்றபிறகு, அக்கட்சியின் தலைவர்கள் மீதமுள்ள பெண்களுக்கு புடவைகளை வழங்கி வந்தனர். அப்போது, திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும், படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 2வது முறையாக நிகழ்ந்துள்ள இதுபோன்ற சம்பவம், ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையும் ஆளும் தரப்பு விவகாரமாக கையில் எடுத்து விமர்சித்து வருகிறது.

சந்திரபாபுநாயுடு
இந்நிலையில், இன்னொரு சலசலப்பு கிளம்பி உள்ளது.. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ். இவர் அக்கட்சியின் தேசிய பொது செயலாளராக பணியாற்றி வருகிறார்.. வரப்போகும் தேர்தலில் கட்சியின் வெற்றியை குறிவைத்து 400 நாட்கள் நடைபெறும் 4000 கிலோ மீட்டர் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.. சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் இருந்து துவங்கப்பட்ட பாதயாத்திரை தற்போது சித்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

லோகேஷ் ஆர்வம்
இந்த நிலையில் நேற்றைய தினம், மதனப்பள்ளி அருகே நாரா.லோகேஷ் பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்தார்... அப்போது அரசு பஸ் ஒன்று எதிரே வந்தது.. அந்த பஸ்ஸை ஓட்டி வந்த டிரைவர், லோகேஷை திடீரென நேரில் பார்த்ததுமே பரவசமாகிவிட்டார். அதனால் பஸ்ஸை நிறுத்திவிட்டு, லோகேஷூக்கு ஆசை ஆசையாக கை கொடுத்தார்... லோகேஷின் கைகளை இரு கைகளாலும் அழுத்தமாக பிடித்து நெகிழ்ந்து போனார்.. அதற்கு மேல் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்த, திடீரென தன்னுடைய பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து, அதன் பின்பகுதியில் ஒட்டி வைத்திருந்த சந்திரபாபு நாயுடு போட்டோக்களை லோகேஷிடம் ஆர்வத்துடன் காண்பித்தார்.

ஆக்ஷன் பறந்தது
அதற்கு பிறகு, லோகேஷ் அங்கிருந்து நகர்ந்தார்.. பஸ்ஸும் கிளம்பி சென்றுவிட்டது.. இந்த நிலையில் லோகேஷுக்கு கை கொடுத்த அந்த பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்துவிட்டதாக, போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.. இந்த விஷயம் கேள்விப்பட்ட நாரா.லோகேஷ், அரசு இதுபோன்ற சிறிய விஷயங்களை பார்த்து ஏன் பயப்படுகிறது என்றே தெரியலயே என்றார்.. சந்திரபாபு மகனுக்கு கை கொடுத்த அரசு பஸ் டிரைவர், மறுநாளே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை அந்த மாநிலத்தில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications