"மேடம் ரேபிட்டோவா.." நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்த குரல்.. ஜஸ்ட் மிஸ்ஸில் உஷாரான பெண்! திக்திக்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவரை பைக் டாக்சி என்று சொல்லி இளைஞர் ஒருவர் அழைத்திருக்கிறார். இருப்பினும், அவரது டூவீலரில் நம்பர் பிளேட் கூட இல்லையாம். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

இந்த காலத்தில் பலரும் பைக் டாக்சியில் பயணிக்கவே விரும்புகிறார்கள். நகரின் டிராபிக் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில், காரை காட்டிலும் பைக் என்றால் புகுந்து புகுந்து ஈஸியாக சென்றுவிடலாம் என்பதே அதற்கு காரணமாகும். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கூட இப்போது கணிசமாக பைக் டாக்சியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

Hyderabad Bike Taxi Scam Hyderabad Bike Taxi

என்ன நடந்தது!

இருப்பினும், இதில் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாகும் வகையிலான சம்பவங்கள் அவ்வப்போது நடந்தே வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த அப்படியொரு சம்பவம் குறித்த வீடியோ தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. அதாவது ஹைதராபாத்தின் சார்மினார் பகுதியில் இரவு நேரத்தில் ஆட்டோவுக்காக காத்திருந்த பெண்ணிடம், "ரேப்பிடோ டிரைவர்" என கூறி ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து சவாரிக்கு அழைத்துள்ளார்.

நம்பர் பிளேட்

இருப்பினும், அந்த நபர் வந்த ஸ்கூட்டரில் நம்பர் பிளேட் கூட இல்லாததால் சந்தேகமடைந்த அந்த பெண், அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார். கன்டெண்ட் கிரியேட்டரான சித்தேஸ்வரி சுகந்த், சனிக்கிழமை இரவு சார்மினார் அருகே தனது ஆட்டோவுக்காக காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒருவர், "எங்கே செல்கிறீர்கள்? நான் டிராப் செய்யட்டுமா?" என்று கேட்டுள்ளார். சித்தேஸ்வரி ஏற்கனவே ஆட்டோ ஒன்றை புக் செய்திருந்ததால், பைக் டாக்சி தேவையில்லை என்று கூறியுள்ளார்.

அந்த பெண் பகிர்ந்த வீடியோவிலும் அந்த நபர், "உங்களுக்கு ரேபிட்டோ வேண்டுமா மேடம்?" என்று கேட்டு தெளிவாக கேட்கிறது. இதனால் சந்தேகமடைந்த சித்தேஸ்வரி உடனடியாக அவரது டிரைவர் அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டுள்ளார். அப்போது அந்த ஸ்கூட்டரில் நம்பர் பிளேட் இல்லாததையும் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமாளித்த இளைஞர்

ரேபிட்டோ டிரைவர் என்றால் அந்த செயலியில் அவருக்கு ஐடி இருக்கும். அதை காட்டியிருக்க வேண்டும். ஆனால், அந்த பெண் கேட்ட பிறகு தான் அவர் ரேபிடோ செயலியையே டவுன்லோட் செய்தாராம். இதனால் மேலும் சந்தேகமடைந்த அவர், மீண்டும் மீண்டும் டிரைவர் லைசன்ஸை காட்டுமாறு வலியுறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த நபர், "வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை" என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட சித்தேஸ்வரி, "வண்டியே ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், என்னை எப்படி அழைத்து செல்ல முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்னர் அந்த நபரின் செல்போனை வாங்கி பார்த்தபோது, அதில் ஐடி எதுவும் இல்லை.. மாறாக அப்போது தான் அவர் செயலியையே ஓபன் செய்திருக்கிறார். நம்பரை வெரிபை செய்யும் ஓடிபி பக்கத்தில் தான் அவர் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த சித்தேஸ்வரி அவரை கடுமையாக திட்டி, அங்கிருந்து உடனடியாக செல்லுமாறு அவரிடம் கூறியுள்ளார்.

விமர்சனம்

இந்த சம்பவம் குறித்து சித்தேஸ்வரி கூறுகையில், "எந்தவித ஐடியும் இல்லாமல்.. திடீரென இரவு 9 மணியளவில் ஒரு பெண்ணை அணுகி நான் டிராப் செய்யட்டுமா என எப்படி கேட்க முடிகிறது. மேலும், இந்த சம்பவத்துக்கு நான் ரேபிட்டோ நிறுவனத்தை தான் குறை கூறவில்லை. நான் தொடர்ந்து ரேப்பிடோ செயலியை பயன்படுத்தி வருகிறேன். இரவு நேரங்களில் பயணிக்கும்போதும் கால் செய்து பாதுகாப்பாக இருக்கிறீர்களா என ரேப்பிடோ கேட்பார்கள். அந்தளவுக்கு பாதுகாப்பு வசதிகளை கொண்ட செயலி. ஆனால், ரேபிட்டோ பெயரை பயன்படுத்தி இந்த நபர் என்னை அழைத்தார். ஆனால் அவர் உண்மையில் ரேப்பிடோ டிரைவரே இல்லை" என்றார்.

நெட்டிசன்கள்

அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார்கள். ஒரு தரப்பினர் அந்த பெண் மிகவும் துணிச்சலாக இதை அம்பலப்படுத்தியதாகப் பாராட்டி வருகிறார்கள். அதேநேரம் இன்னும் சிலர் ஹைதராபாத்தில் மக்கள் கூடும் இடங்களில் இதுபோல பைக் டாக்சி இல்லை என்றாலும் அருகே உள்ள ஏரியாக்களில் டிராப் செய்யும் வேலையை சிலர் செய்து வருவதாகவும் இதில் பெரிய தவறு இல்லை என்றும் சொல்லி வருகிறார்கள். இருப்பினும், உரிய நம்பர் பிளேட் கூட இல்லாமல் இப்படி வண்டி ஓட்டுவதே சட்டப்படி குற்றம் என அதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

சித்தேஸ்வரி இந்த வீடியோவுக்கு ரேப்பிட்டோ நிறுவனமும் பதிலளித்துள்ளது. பயணிகள் தங்கள் ரேப்பிடோ செயலியில் டிரைவர் மற்றும் வண்டி விவரங்களைச் சரிபார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. பயணம் தொடங்கும்போது ஓடிபி, டிரைவர் விவரம் மற்றும் வாகனம் உள்ளிட்ட விவரங்கள் பகிரப்படும். அவை அனைத்தும் மேட்ச் ஆகியிருந்தால் மட்டுமே வண்டியில் ஏற வேண்டும் என ரேப்பிட்டோ கேட்டு கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+