பாம்பு கடித்தும் ஹாஸ்பிட்டல் போக மறுத்த ஹைதராபாத் பிசினஸ்மேன்! 2 மணி நேரத்தில் நெஞ்சை உலுக்கிய சோகம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விளையாட்டுத்தனமாக கையில் பாம்பைப் பிடித்து நண்பர்களை பயமுறுத்த முயன்ற இளம் தொழிலதிபர் ஒருவர், அந்தப் பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இல்லாத அலட்சியமே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.. என்ன நடந்தது?

ஹைதராபாத் ராஜேந்திரநகர் காத்ரி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் நவாப் சையத் குமைஸ் மைதீன் ஹுசைனி.. 30 வயதான இவர் ஒரு தொழிலதிபர்..

Hyderabad Businessman Snake Bite Death Hyderabad News Farmhouse Incident Medical Emergency Snake Bite Case Businessman Death Telangana News

சம்பவத்தன்று மொய்னாபாத் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு நண்பர்களுடன் ஜாலியாக பொழுதுபோக்குவதற்காக சென்றுள்ளார். ஜூன் 17ம் தேதி நள்ளிரவு சுமார் 3 மணியளவில், அந்த பண்ணை வீட்டுக்குள் ஒரு சிறிய நச்சுப்பாம்பு நுழைந்துள்ளது.

ஹைதராபாத் தொழிலதிபர்

வழக்கமாக பாம்புகளைக் கண்டால் விலகிச் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில், ஹுசைனி அந்தச் சிறிய பாம்பைக் கண்டு பயப்படாமல், அதைத் தனது கைகளில் அள்ளிப் பிடித்துள்ளார்.

கையில் பாம்பை வைத்துக்கொண்டு அங்கிருந்த தனது நண்பர்களை நோக்கி நீட்டி, அவர்களை மிரட்டவும், பயமுறுத்தவும் தொடங்கியுள்ளார். சுற்றியிருந்த நண்பர்கள் இதை பார்த்து பதறிப்போய்விட்டார்கள்.. உடனே பாம்பைக் கீழே போடுமாறும், பாம்பு விஷயத்தில் இப்படியா கேஷூவலாக இருப்பது என்றும் எச்சரித்துள்ளனர்.. ஆனால் அவர்கள் பேச்சை ஹுசைனி கேட்கவில்லை.

சின்ன பாம்பு கட்டை விரலில் கடித்தது

பாம்பை கையில் வைத்து கொண்டு விளையாட்டு காட்டிக்கொண்டேயிருந்தபோது, அந்த குட்டி பாம்பு திடீரென ஹுசைனியின் வலது கை கட்டை விரலை பலமாக கவ்விப் பிடித்துக் கடித்தது. பாம்பு கடித்தவுடன்தான், அவர் அதை தூக்கி எறிந்துள்ளார். உடனே நண்பர்கள் பதற்றமடைந்து, வலிக்குதா? உடனே ஹாஸ்பிட்டல் போகலாம் என்று சொல்லி உள்ளனர்..

ஆதற்கு ஹூசைனி, இதெல்லாம் சாதாரண கடிதான், பாம்பு கடித்தாலும் எனக்கு எதுவுமே செய்யாது, நான் நல்லா இருக்கேன் என்று சொல்லி அலட்சியமாக மறுத்துள்ளார். இதனிடையே, ஹுசைனி பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு நண்பர்களிடம் பேசும் காட்சிகளையும், அந்தப் பாம்பு அவரது மணிக்கட்டில் சுருண்டு கிடப்பதையும் அங்கிருந்த நண்பர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக ரிக்கார்டு செய்ய ஆரம்பித்தனர்..

சீரியஸ் கண்டிஷன்

ஆனால், பாம்பு கடித்து சுமார் ஒரு மணி நேரம் வரை சாதாரணமாக இருந்த ஹுசைனிக்கு, பிறகு மெல்ல மெல்ல உடம்பு சரியில்லாமல் போனது.. மூச்சுத் திணறல் அதிகமானது..

அப்போது இதை பார்த்து பயந்த நண்பர்கள், அவரை உடனடியாக மெஹ்திபட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி ஊசி செலுத்தப்பட்டது. ஆனாலும் உடலில் விஷம் வேகமாக பரவியதால் அவரது நிலைமை இன்னும் கவலைக்கிடமானது. எனவே அவர் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள பிரபல உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கொஞ்ச நேரத்திலயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்

சின்ன அலட்சியம் பெரிய பாதிப்பு

உயிரிழந்த தொழிலதிபர் ஹுசைனிக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஒரு சின்ன பாம்பை, அலட்சியமாக நினைத்து விளையாடியது, ஒரு உயிரை பறித்து, அந்த குடும்பத்தையே இன்று நிலைகுலைய வைத்துவிட்டது..

வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் முறையான பயிற்சியோ, பாதுகாப்பு உபகரணங்களோ இல்லாமல் பாம்புகளைக் கையாளக் கூடாது என்றும், வீடுகளிலோ பண்ணை வீடுகளிலோ பாம்புகள் புகுந்தால் உடனடியாக மீட்புக் குழுவினரையும் வனத்துறையினரையும் அழைக்க வேண்டும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+