டாக்டர் மட்டுமல்ல.. மேலும் 9 பேரை அதே பாணியில் எரித்து கொன்றனர்.. ஹைதராபாத் போலீஸ் ஷாக் தகவல்
Recommended Video
ஹைதராபாத்: டாக்டரை பலாத்காரம் செய்து எரித்துக்கொன்றதை போலவே, வேறு 9 பேரையும் எரித்து கொன்றோம் என்று என்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரும் வாக்குமூலமாக அன்று தெரிவித்துள்ளனராம்.. இந்த அதிர்ச்சி தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
ஐதராபாத்தின் ஷம்சாபாத்தில், போன 27ம் தேதியன்று 26 வயதான கால்நடை பெண் டாக்டரை 4 பேர் பலாத்காரம் செய்தனர். பிறகு அவரது உடல் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் இந்த சம்பவம் உலுக்கி எடுத்த நிலையில், முகமது ஆரிஃப், ஜொலு சிவா, சென்னக்கேசவுலு, ஜொலு நவீன் ஆகிய சம்பந்தப்பட்ட அந்த 4 பேரையும் கடந்த 6ம் தேதி என்கவுண்டரில் போலீசார் சுட்டு சாகடித்தனர்.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை, முகமது ஆரிஃப், சென்னகேசவலு இவர்கள்தான் மூளையாக இருந்து செயல்பட்டதாக கூறப்பட்டது. இவர்களை அன்று கைது செய்போது, போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அந்த வாக்குமூலத்தில் இவர்கள் அளித்த ஒரு தகவலை ஹைதராபாத் போலீசார் தற்போது வெளிப்படுத்தி உள்ளனர்.
அதாவது டாக்டரை கொன்று எரித்ததுபோலவே, அதே பாணியில் 9 பேரை சீரழித்து எரித்து கொன்றார்களாம்.. அந்த 9 பேரில் பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள், இளம் பெண்கள் அடங்குவர்.. சங்காரெட்டி, ரங்காரெட்டி, மெகபூப் நகர் ஆகிய இடங்களை ஒட்டியுள்ள ஹைவேஸ் சாலைகளிலும், தெலுங்கானா-கர்நாடகா மாநில எல்லையோர நகர்ப்புற பகுதிகளிலும்தான் இந்த 9 பேரை எரித்து கொன்றதாக 4 பேரும் போலீசாரிடம் சொல்லி உள்ளனர்.
இந்த தகவல்களின் அடிப்படையில், சுட்டு கொல்லப்பட்ட முகமது ஆரிஃப், சென்னகேசவுலுவின் செல்போன்களுக்கு வந்த அழைப்புகளை வைத்தும், செல்போன்களின் டவர்களின் ஏரியாக்களை வைத்தும், எரித்து கொல்லப்பட்ட அந்த 9 அப்பாவிகள் குறித்த தேவையான ஆதாரங்களை போலீசார் திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் நோட்டீஸ்களையும் ஐதராபாத் போலீசார் வழங்கி வருகிறார்களாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications