அவர்களை ஓட விட்டு.. மக்கள் அடித்தே கொல்ல வேண்டும்.. ஹைதராபாத் மருத்துவர் கொலையால் பொங்கிய ஜெயாபச்சன்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை வன்புணர்வு செய்து கொலை செய்த கொடூரர்களை சாலையில் ஓடவிட்டு மக்கள் கொடூரமாக குழுவாக சேர்ந்து கொல்ல வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி ராஜ்ய சபா எம்பி ஜெயாபச்சன் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த புதன் கிழமை ஹைதராபாத்தில் 26 வயது கால்நடை மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த வன்புணர்வு சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரத்தை செய்தது மொத்தம் நான்கு பேர். முகமது ஆரிப், ஜொள்ளு சிவா , ஜொள்ளு நவீன், சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு என அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும் முன்னாள் நடிகையும், தற்போதைய சமாஜ்வாதி கட்சி ராஜ்ய சபா எம்பியுமான ஜெயாபச்சன் இதுகுறித்து இன்று ராஜயசபாவில் கடுமையாக பேசினார்.

என்ன பேசினார்
ஜெயாபச்சன் தனது பேச்சில், இது போன்ற நபர்களை சாலையில் ஓடவிட்டு கொலை செய்ய வேண்டும். மக்கள் இவர்களை அடித்தே கொல்ல வேண்டும். இவர்களுக்காக சட்டம் காத்திருக்க கூடாது. இது தொடர்பாக அரசு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் .

மிக கொடூரம்
இது போன்ற கொடூரங்கள் பற்றி நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். மக்களிடம் இவர்களை விட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிர்பயா, கத்துவா வழக்கில் சட்டம் நடவடிக்கை எடுத்தது. இதில் மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அரசும் அனுமதி தர வேண்டும்.

அரசு என்ன செய்கிறது
இவர்களை கட்டுப்படுத்த அரசு என்ன செய்து இருக்கிறது. எத்தனை பெண்கள் இதில் இருந்து காக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கொடூரர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று ஜெயாபச்சன் கடுமையாக பேசினார். அவரின் இந்த பேச்சு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பெரிய வரவேற்பு
ஜெயாபச்சனின் இந்த கருத்தை பலரும் வரவேற்று இருக்கிறார்கள். ஆம் இந்த கொடூர கொலைகாரர்களை விட கூடாது. அவர்களை சாலையில் ஓட விட்டு சுட வேண்டும். அவர்களை தெரு தெருவாக அடிக்க வேண்டும் என்று மிக கடுமையாக சமூக வலைத்தளங்களில் பலர் டிவிட் செய்து வருகிறார்.

செம எதிர்ப்பு
அதே சமயம் இன்னொரு பக்கம் ஜெயாபச்சனின் கருத்துக்கு எதிராகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குழு கலவரம், சாலையில் அடித்து கொலை செய்வது எங்கள் கலாச்சாரம் கிடையாது. வன்முறைக்கு வன்முறை தீர்வு இல்லை. வேண்டுமானால் தூக்கு தண்டனை கொடுக்காமல். சட்டத்தை மக்கள் எடுத்துக் கொள்ள கூடாது என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!