Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 பேர் சுட்டுக்கொலை.. பதில் தெரியாத 6 கேள்விகள்.. ஹைதராபாத் என்கவுண்டரில் நிலவும் மர்மங்கள்!

ஹைதராபாத்தில் வன்புணர்வு கொலை வழக்கில் 4 குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஐதராபாத் என்கவுண்டர்... மக்கள் கருத்து

    ஹைதராபாத்: ஹைதராபாத்தில் வன்புணர்வு கொலை வழக்கில் 4 குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.இவர்கள் நான்கு பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டதை எல்லோரும் வரவேற்றாலும், நிறைய பதில் தெரியாத கேள்விகள் இன்னும் உலவிக் கொண்டு இருக்கிறது.

    இந்தியாவையே உலுக்கும் வகையில் கடந்த மாதம் 27ம் தேதி ஹைதராபாத் அருகே கால்நடை மருத்துவ பெண்மணி வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார். மிக மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர். முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

    நேரம் மாறுபாடு

    நேரம் மாறுபாடு

    இந்த என்கவுண்டர் அதிகாலை 6 -6.30 மணிக்கு நடந்தது என்று சைபராபாத் துணை கமிஷ்னர் என் பிரகாஷ் ரெட்டி தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த என்கவுண்டரில் ஈடுப்பட்ட போலீஸ் குழுவினர் இந்த சம்பவம் நடந்தது அதிகாலை 3.30 மணிக்கு என்று கூறியுள்ளனர். இந்த நேர வித்தியாசம் நிறைய சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

    ஏன் அவ்வளவு தாமதம்

    ஏன் அவ்வளவு தாமதம்

    ஒருவேளை 3.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்து இருக்கிறது என்றால் ஏன் அந்த நேரத்தில் அந்த இடத்திற்கு குற்றவாளிகளை கொண்டு செல்ல வேண்டும். பாதுகாப்போடு அதிகாலையில் அல்லது மாலையில் கொண்டு சென்று இருக்கலாமே, ஏன் பின் இரவில் கொண்டு சென்றார்கள், என்ன திட்டத்துடன் அப்படி செய்தார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

    எப்படி துப்பாக்கி

    எப்படி துப்பாக்கி

    இது மட்டுமின்றி அவர்கள் நான்கு பேரும் போலீசாரை கல்லால் தாக்கி இருக்கிறார்கள். இன்னொருவர் போலீசாரின் துப்பாக்கியை வைத்து அவர்களை சுட முயன்றுள்ளார். அவர் போலீசிடம் இருந்து துப்பாக்கியை பறித்து அவர்களை கொலை செய்ய முயன்றுள்ளார். இது எப்படி நடந்தது, எப்படி இதை விட்டார்கள் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

    கையில் விலங்கு

    கையில் விலங்கு

    நான்கு குற்றவாளிகளும் கையில் விலங்கு மாட்டி இருந்தனர். அதை மீறி அவர்கள் கையில் எப்படி துப்பாக்கி சென்றது. அப்படி அவர்கள் விலங்கு மாட்டவில்லை என்றால், அவ்வளவு மோசமான கொலைகாரர்களுக்கு ஏன் விலங்கு அணிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது.

    7 நாள் ஏன்?

    7 நாள் ஏன்?

    அதேபோல் முதலில் போலீசார் அந்த 4 பேரையும் 7 நாள் கஸ்டடி கேட்டார்கள். இந்த நிலையில் பொறுமையாக 5 நாள் காத்திருந்து அவர்களை கிரைம் நடந்த இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்துள்ளனர். போலீஸ் பொதுவாக விசாரணையில் முதல் நாளோ மறுநாளோ தான் குற்றவாளிகளை சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லும்.

    அறிக்கை என்ன

    அறிக்கை என்ன

    அதன்பின் அறிக்கை தயார் செய்து பின்னர் வாக்குமூலங்களை வாங்குவார்கள். ஆனால் இந்த முறை போலீஸ் 5 நாட்கள் காத்து இருந்தது. என்ன திட்டத்திற்காக போலீஸ் இப்படி காத்து இருந்தது , பிண்ணனியில் என்ன நடந்தது என்று கேள்வி எழுந்துள்ளது .

    யார் ஆர்டர்?

    யார் ஆர்டர்?

    அதேபோல் களத்தில் இருந்த உயர் அதிகாரிகள் யார். அங்கு பிரச்சனை வந்த அந்த நேரத்தில் என்கவுண்டர் செய்ய அனுமதி கொடுத்த அதிகாரி யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நான்கு கிரிமினல் கொல்லப்பட்டதே மேல். ஒரு பெண்ணை துடி துடிக்க கொன்றவர்களை போலீஸ் கொன்றுள்ளது. அதனால் அதை கேள்வி எழுப்ப கூடாது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+