Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதல் மனைவிக்கு தீ வைத்த அரக்கன்! தடுக்க வந்த மகளையும் தீயில் தள்ளிய கொடூரம்! ஹைதராபாத்தில் திக்திக்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கணவரே தனது காதல் மனைவியைப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளான். இதைப் பார்த்துத் தடுக்க வந்த மகளையும் அந்தத் தீயில் தள்ளியுள்ளான் அந்தக் கொடூரன். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்தே வருகிறது. குறிப்பாகக் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் தெலுங்கானாவில் நடந்துள்ளது. அங்கு ஹைதராபாத்தின் நல்லகுண்டா பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

Hyderabad Horror Man Sets Wife on Fire in Front of Children Pushes Daughter into Flames

கொடூரம்

பெற்ற குழந்தைகள் இருக்கும்போது, அதைக் கூட கண்டு கொள்ளாமல் அவர்கள் கண் முன்னே அந்தப் பெண்ணுக்குக் கணவர் தீ வைத்துள்ளார். மனைவியைக் கொன்ற கொடூரன் வெங்கடேஷ், அங்கிருந்து தப்பிச் செல்லும் முன்பும் தனது மகளையும் தீயில் தள்ளியுள்ளான். கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாளான டிசம்பர் 24ம் தேதி இந்தக் கொடூரம் நடந்த நிலையில், இந்தச் சம்பவம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

என்ன நடந்தது!

வெங்கடேஷுக்கும் அவரது மனைவி திரிவேணிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தனது மனைவி மீது சந்தேகப்பட்டு வெங்கடேஷ் அடிக்கடி சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.. இந்தச் சூழலில் தான் கடந்த டிசம்பர் 24ம் தேதி குழந்தைகள் முன்னிலையிலேயே வெங்கடேஷ், திரிவேணியைத் தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். தாயைக் காப்பாற்ற வந்த மகளையும் தீயில் தள்ளிவிட்டு வெங்கடேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். இருப்பினும், பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் திரிவேணி தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். அவரது ஆறு வயது மகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்

இதில் விஷயம் என்னவென்றால் வெங்கடேஷும் திரிவேணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களாம். இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகும் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு வெங்கடேஷ் அவரை துன்புறுத்தி வந்துள்ளார். கணவரின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் திரிவேணி பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது வெங்கடேஷ் தான் அங்குப் போய் மன்னிப்பு கேட்டு, பெரியோர்கள் மூலம் சமரசம் செய்துள்ளான். இனி சந்தேகப்பட்டு சண்டை போட மாட்டேன் எனக் கெஞ்சியுள்ளான். அதன் பிறகே திரிவேணி வெங்கடேஷ் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். ஆனால், அவர் வீட்டிற்கு வந்த உடனேயே சில நாட்களில் இந்தக் கொடூரம் நடந்துள்ளது.

மோதல்

சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல ஏற்பட்ட மோதலில், திரிவேணி காவல்துறையிலும் மகளிர் பாதுகாப்புப் பிரிவிலும் புகார் அளித்திருந்தார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு வெங்கடேஷ் வீட்டை விட்டு எங்கேயோ போய்விட்டாராம். இதனால் குடும்பத்தை நடத்த வேறு வழியில்லாமல் திரிவேணி ஒரு ஹோட்டலிலும் சில வீடுகளிலும் தினசரி வேலை செய்யத் தொடங்கினார்.

அக்கம் பக்கத்தினர்

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கூறுகையில், "திரிவேணி தனது குழந்தைகளை வளர்க்கக் கடுமையாக வேலை செய்தார்.. அவர்களை ஸ்கூலுக்கு அனுப்பிய உடனேயே வேலைக்கு ஓடிவிடுவார். வெங்கடேஷ் பொறுப்பில்லாமல் குடித்துவிட்டுச் சுற்றிக் கொண்டு இருப்பான். இரண்டு மாதங்களுக்கு முன் வெங்கடேஷ் மீண்டும் வீட்டிற்கு வந்தபோதே, திரிவேணியை கவனமாக இருக்கச் சொன்னோம்.. திரிவேணி தன் கணவனுக்கு ₹1 லட்சம் மதிப்புள்ள பைக்கை கூட வாங்கி கொடுத்திருந்தார். ஆனால், அந்தக் குடிகாரன் அதை வெறும் ₹15,000-க்கு விற்றுவிட்டான்" என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேஷைத் தீவிரமாகத் தேடி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+