கறிக்கடைக்காரரிடம் கல்யாணிக்கு பழக்கம்.. கடைசியில் 10 துண்டுகளான பெண்.. காட்டிக் கொடுத்த டாட்டூ

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவின் இப்ராஹிம்பட்டினம் பகுதியில் கால்வாயில் பெண்ணின் உடல் பாகங்கள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது... யார் அந்த பெண், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், கையில் இருந்த அந்த "டாட்டூ" தான் முக்கிய தடயமாக மாறியிருக்கிறது.. இதுகுறித்த விசாரணையையும் போலீசார் மும்முரப்படுத்தி உள்ளனர்.

மேற்கு கோதாவரி மாவட்டம் ஆக்கிமேடு பகுதியை சேர்ந்தவர் கல்யாணி... இவர் மங்களகிரி பகுதியிலுள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கவுஸ் முகைதீன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது... நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமாகவும் மாறியிருக்கிறது..

Hyderabad Kalyani Case Butcher Case Tattoo Identity

கல்யாணிக்கு ஆண் குழந்தை

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கவுஸ் முகைதீன், கல்யாணியுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

அதன்பிறகு அந்த குழந்தையை தனது உறவினரான பவானிப்புரத்தை சேர்ந்த ஷபியிடம் கொடுத்துள்ளார். ஷபிக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். ஆண் குழந்தை இல்லாததால், அந்த குழந்தையை ஷபி வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

கறிக்கடைக்காரர் ஷபி

குழந்தையை பார்க்க கல்யாணி அடிக்கடி ஷபியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது கல்யாணிக்கும் ஷபிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டதாம்.. ஒரு கட்டத்தில் ஷபியிடம் கல்யாணி உரிமையாக பணம் கேட்க ஆரம்பித்தார். ஷபியும் தொடர்ந்து பணம் கொடுத்து வந்துள்ளார்.

Hyderabad Kalyani Case Butcher Case Tattoo Identity

ஆனால், ஒரு நாள் ரூ.20 ஆயிரம் உடனடியாக வேண்டும் என்று கல்யாணி கேட்டிருக்கிறார்.. அந்த நேரத்தில் ஷபியிடம் பணம் இல்லை என்பதால், தன்னால் கொடுக்க முடியாத சூழ்நிலையை சொல்லியிருக்கிறார் உடனே இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த கல்யாணி, ஆண் குழந்தையை தன்னிடமே தந்துவிட வேண்டும என்று கறாராக கேட்டுள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்த ஷபி, 10 வருஷமாக உயிருக்கு உயிராக வளர்த்து வரும் குழந்தையை எப்படி தர முடியும்? என்று கேட்டுள்ளார்.. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது கண்டிப்பாக ஆண் குழந்தையை பணயமாக வைத்து கல்யாணி பணம் பறித்து கொண்டேயிருப்பார், அல்லது குழந்தையையே தன்னிடமிருந்து பறித்தும் விடுவார் என்று ஷபி பயந்து போனார்.

10 துண்டுகளாக போன பெண்

அதனால் பணம் தருவதாக கூறி கல்யாணியை தனது கறிக்கடைக்கு ஷபி வரவழைத்துள்ளார்.. அங்கு கறிக்கடையில் வேலை பார்க்கும் குருவுல் என்பவருடன் சேர்ந்து கல்யாணியை வெட்டி கொன்றுள்ளார்.. பிறகு உடலை 10 துண்டுகளாக வெட்டி, இப்ராஹிம்பட்டினம் பகுதியில் உள்ள கூலிங் கால்வாயில் வீசி விட்டாராம்..

இதற்கு பிறகுதான், கால்வாயில் மனித உடல் பாகங்கள் கிடப்பதை பார்த்து அலறிப்போன பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்..

Hyderabad Kalyani Case Butcher Case Tattoo Identity

காட்டித் தந்த டாட்டூ

போலீசாரும் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்கள்.. எந்த க்ளூவும் கிடைக்கவில். பிறகு கால்வாயில் கைப்பற்றப்பட்ட சடலத்தின் கையிலிருந்த டாட்டூவை கவனித்தனர்.. உடனே அந்த டாட்டூவை போட்டோக்களாக எடுத்து போலீசார் சோஷியல் மீடியாவில் வெளியிட்டனர்.

அந்த டாட்டூவை பார்த்த கல்யாணியின் அண்ணன், அந்த உடல் தன்னுடைய சகோதரியுடையது என்று போலீசாரிடம் தெரிவித்தார்... இதற்கு பிறகுதான், போலீசாரின் விசாரணை வேகமெடுத்தது.. இறுதியில், பணம் கேட்டு ஏற்பட்ட தகராறும், பல ஆண்டுகளாக வளர்த்து வந்த ஆண் குழந்தையை திரும்பக் கேட்கப்பட்ட விவகாரமும் இந்த கொலைக்கு காரணமாக இருந்துள்ளதும் அம்பலமானது.. இப்போது கறிக்கடைக்காரர் ஷபி மற்றும் குருவுலு 2 பேரையுமே போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+