13 நிமிடங்களில் 13 கி.மீ! ரயிலில் பறந்த இதயம்.. மருத்துவர்களுக்கு பேருதவி புரிந்த ஹைதராபாத் மெட்ரோ!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத் மெட்ரோ ரயில், ஒரு உயிரைக் காப்பாற்ற, மருத்துவர்களுக்கு உற்ற துணை புரிந்துள்ளது. தானம் பெறப்பட்ட இதயம் ஒன்றை நோயாளிக்கு பொருத்துவதற்காக 13 கி.மீ தொலைவை வெறும் 13 நிமிடத்தில் ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் கொண்டு சென்று உரிய இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

பொதுவாக உயிரிழந்த நபர்களின் உறுப்புகளை தானம் செய்வதன் மூலமாக வேறு ஒருவரோ, பலரோ உயிர் வாழ்கின்றனர். அந்த வகையில், மூளைச்சாவு அடைந்தவர்களின் இதயம் உள்ளிட்ட உறுப்புகள், பலரை வாழ வைக்கின்றன. மக்களிடையே விழிப்புணர்வு காரணமாக கடந்த சில வருடங்களாக உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருகிறது.

metro train hyderabad telangana


அப்படி தானம் செய்யும் உறுப்புகளை குறிப்பிட்ட நேரத்தில் பொருத்த வேண்டியது அவசியம். ஒவ்வொரு உள்ளுறுப்புக்கும், அதன் தன்மைக்கேற்ப, உடனடியாக பொருத்த வேண்டியது முக்கியம். இந்நிலையில், ஹைதராபாத்தில், அப்படி தானம் பெறப்பட்ட இதயம், மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகரின் காமினேனி மருத்துவமனையில் பெறப்பட்ட இதயத்தை லக்டிகாபுலில் இருக்கும் க்ளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டு மருத்துவமனைக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 13 கி.மீ. இதை வெறும் 13 நிமிடத்தில் சென்றடைந்து, இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட பகுதி என்பதால், ஆம்புலன்ஸ் மூலம் சென்றால் கூட தாமதம் ஆகலாம் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து மிகுந்த நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இதயத்தை கொண்டு செல்ல ஹைதராபாத் மெட்ரோ நிர்வாகம் உதவி செய்துள்ளது.

13 கி.மீ தொலைவை 13 நிமிடங்களில் சென்றடைய, மருத்துவ நிபுணர்கள், ஹைதராபாத் மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் பேசி திட்டமிட்டனர். அதன்படி, பச்சை வண்ண வழித்தடம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு, அதிகாரிகள், ஊழியர்களின் ஒத்துழைப்புடன் உரிய நேரத்தில் இதயம் சென்றடைந்துள்ளது.

மெட்ரோ ரயிலில் பலத்த பாதுகாப்போடு, எந்த இடையூறும் இன்றி மருத்துவர்களால் இதயம், திட்டமிடப்பட்டவாறே 13 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கடந்து, பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, மருத்துவர்களும், பொதுமக்களும், மெட்ரோ நிர்வாகம் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+