ஹைதராபாத்தில் ஐடி ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் பார்க்.. 30 பூங்காக்களில் என்னென்ன வசதிகள் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வொர்க் ஃப்ரம் ஹோம் அதாவது வீட்டில் இருந்தே வேலை செய்வதைவிட, மரங்கள் நிறைந்த பூங்காவில் உட்கார்ந்து வேலை செய்தால் எப்படி இருக்கும்? அதுவும் அலுவலகத்தில் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் பூங்காவிலேயே கிடைத்தால்? கண்டிப்பாக பலருக்கும் இது பிடிக்கவே செய்யும்.. அப்படியொரு புதிய வசதியை ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக 30 பூங்காக்களைத் தயார்படுத்தி வருகிறது..!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் பகுதியில், ஐடி ஊழியர்கள் பூங்காக்களில் அமர்ந்து வேலை செய்யும் வகையில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக முதல் கட்டமாக 30 பூங்காக்களைத் தேர்வு செய்து, அவற்றில் இலவச வைஃபை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

Work From Park Project Cyberabad Parks Free WiFi

வொர்க் ஃப்ரம் பார்க்

தெலங்கானாவின் சைபராபாத் பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வேலை செய்யும் ஐடி ஊழியர்கள் மட்டுமல்லாமல், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், ஃப்ரீலான்சர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள், மாணவர்கள் என பலரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்காக பூங்காக்களில் அமைதியான சூழல், உயரமான மரங்கள், வசதியான நாற்காலிகள், இலவச வைஃபை, கஃபேடேரியா, ஒன்றாக அமர்ந்து வேலை செய்யும் இடங்கள் என பல வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

சைபராபாத் மாநகராட்சி ஆணையர் ஜி. ஸ்ருஜனா செய்தியாளர்களிடம் இதுகுறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.. அப்போது அவர் சொன்னதாவது:

"செரிலிங்கம்பள்ளி மண்டலத்தில் உள்ள மஜீத்பந்தா மாதவ் ஹில்ஸ் காலனியில் 1.5 ஏக்கர் பரப்பளவிலும், குக்கட்பள்ளி மண்டலத்தில் உள்ள மாதாப்பூரில் ஒரு ஏக்கர் பரப்பளவிலும் முதற்கட்டப் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. இந்த இரண்டு இடங்களிலும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

என்னென்ன வசதிகள்?

வேலை செய்வதற்கான இடங்கள் மட்டுமல்லாமல், திறந்தவெளி அரங்கம், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சந்தித்துப் பேசுவதற்கான அறை, நடைபாதை, மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி, கழிவறைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட உள்ளன.

அலுவலகத்துக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், அமைதியான சூழலில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இந்தப் பூங்காக்கள் உதவியாக இருக்கும். காலை முதல் நள்ளிரவு வரை இந்தப் பூங்காக்களை பயன்படுத்தலாம். பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன. அடுத்த ஆண்டு முதல் குறைந்த கட்டணத்தில் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

முதற்கட்டமாக அமைக்கப்படும் 2 பூங்காக்களையும் ஜனவரி 1-ம் தேதிக்குள் திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற பகுதிகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.

Work From Park Project Cyberabad Parks Free WiFi

300 புதிய பூங்காக்கள்

இதனிடையே, சைபராபாத் பகுதியில் பூங்காக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்படி, புதிய வருடத்திற்குள் 300 புதிய பூங்காக்களை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள 97 பூங்காக்களை 2027-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் புதுப்பிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கொம்பள்ளி சர்க்கிள் பகுதியில் உள்ள சென்ட்ரல் பார்க் காலனி பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஆணையர் ஆய்வு செய்துள்ளார். அப்போது பூங்காவுக்கு வருபவர்கள் உட்காருவதற்கு போதுமான இருக்கைகளை அமைக்கவும், பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

2021-லேயே நடந்த முயற்சி

ஹைதராபாத்தில் இதுபோன்ற முயற்சி நடப்பது இதுவே முதல் முறை கிடையாது.. கடந்த 2021-ம் ஆண்டிலேயே GHMC நிர்வாகம் உப்பல் பகுதியில் சுமார் 2,000 சதுர கஜம் பரப்பளவில் லேப்டாப் வைத்து வேலை செய்யும் வசதியுடன் ஒரு ஸ்பெஷல் பார்க்கை உருவாக்கியிருந்தது. ஆனால், அப்போது கொரோனா பாதிப்பு காரணமாக இந்த முயற்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இப்போது வீட்டிலிருந்து வேலை செய்வதும், சில நாட்கள் அலுவலகத்திலும் சில நாட்கள் வீட்டிலிருந்தும் வேலை செய்வதும் அதிகரித்துள்ளன. இதனால் இந்த புதிய திட்டம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாயிலும் இதே திட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கடந்த நவம்பர் 2-ம் தேதி அல் பர்ஷா குளப் பூங்காவில் 'வொர்க் ஃப்ரம் பார்க்' திட்டம் தொடங்கப்பட்டது. திறந்தவெளியில் அமர்ந்து வேலை செய்யும் இந்த வசதிக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைப் பின்பற்றி ஹைதராபாத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+