ஹைதராபாத்தில் கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் மோதி விபத்து
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் பயங்கரமாக மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகி உள்ளன.
ஹைதராபாத்தில் கச்சிகுடா ரயில் நிலையம் நம்மூர் எக்மோர் ரயில் நிலையத்தை போல் முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தான் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கு, தமிழகம், கர்நாடகா உள்ளிட்டமாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கச்சிகுடா ரயில் நிலையத்தில் கோவையில் இருந்து டெல்லி நிஜாமூதின் செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 10 மணி அளவில் நின்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் திடீரென மோதியது.

இந்த விபத்தில் குறைந்தது 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கச்சிகுடா ரயில் நிலையத்தின் உளளே ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுவது வழக்கம். அதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications