Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛கன்னத்தில் விழுந்த அறை’.. ஜெகன்மோகன் கட்சி எம்எல்ஏவால் குடும்பத்துக்கு மிரட்டலா? வாக்காளர் பகீர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர சட்டசபை தேர்தலில் வரிசையில் நிற்காமல் சென்றதால் கேள்வி எழுப்பிய வாக்காளரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சிவக்குமார் அறைந்தார். பதிலுக்கு அந்த நபரும் எம்எல்ஏவுக்கு ‛பளார்' விட்டார். இந்நிலையில் தான் ஓட்டளிக்கும்போது என்ன நடந்தது? எம்எல்ஏவால் தனது குடும்பத்துக்கு மிரட்டல் உள்ளதா? என்பது பற்றி பாதிக்கப்பட்ட நபர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் ஆந்திராவில் சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல்கள் ஒன்றாக அறிவிக்கப்பட்டன. திட்டமிட்டப்படி நேற்றைய தினம் ஆந்திராவில் சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது.

I don t know if my family is under threat but I worried about my family says Sudhakar who slaps YSR Congress MLA Sudhakar

ஆந்திராவில் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அதேபோல் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 88 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

ஆந்திராவில் மும்முனை போட்டி நிலவியது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் + பாஜக + நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி இடையே போட்டி நிலவியது. தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.

நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அப்போது தெனாலி சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சிவக்குமார் உள்ளார். இவர் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடியில் அவர் ஓட்டளிக்க சென்றார். மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் சிவக்குமார் எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளர்கள் நேரடியாக ஓட்டுச்சாவடிக்குள் சென்றார்.

இதையடுத்து வரிசையில் நின்ற சுதாகர் என்பவர், ‛‛நாங்கள் வரிசையில் நிற்கும்போது நீங்கள் மட்டும் எப்படி செல்லலாம் வரிசையில் நின்று வாக்களியுங்கள்'' என்றார். இதனால் டென்ஷனான சிவக்குமார் எம்எல்ஏ அவரது கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு சுதாகரும் எம்எல்ஏ என்று கூட பாராமல் சிவக்குமாரை தாக்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து எம்எல்ஏவை தாக்கிய சுதாகரை போலீசார் அழைத்து சென்றனர். இதுபற்றி சுதாகர் பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: ‛‛தேர்தலை பொறுத்தவரை அனைவரும் வரிசையில் நின்று தான் வாக்காளிக்க வேண்டும். யாருக்கும் இங்கு சிறப்பு வசதி என்பது கிடையாது. இதனால் சிவக்குமார் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களை வரிசையில் நிற்கும்படி கூறினேன். அப்போது அவர், ‛‛என்னிடம் கேள்வி கேட்க நீ யார்? என்னிடம் கேள்வி கேட்க உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?'' எனக்கேட்டு தாக்கினார். பதிலுக்கு நானும் தாக்கினேன்.

உடனே போலீசார் வந்து என்னை பிடித்தனர். அப்போது நான் ஓட்டளிக்கும் வரை எங்கும் வரமாட்டேன் என்று கூறினேன். இதையடுத்து போலீசார் என்னை அழைத்து சென்று ஓட்டளிக்க வைத்தனர். நான் ஓட்டளித்தேன். அதன்பிறகு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். போலீஸ் ஸ்டேஷனில் என்னை அவர்கள் (எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளர்கள்) தாக்கினர். என்னை மிகவும் மோசமாக அடித்தார்கள். சட்டத்தை கடைப்பிடிக்க கூறினேன். ஆனால் அவர்கள் செய்யவில்லை. இதனால் தாக்குதலில் காயமடைந்து என் உடலில் ரத்தம் கொட்டியது.

தற்போது எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிரட்டல் இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக எனக்கும், எனது தாய்க்கும், எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு கேட்டுள்ளேன்’’ என்றார். இதற்கிடையே தான் சம்பவம் தொடர்பான புகாரில் போலீசார் சிவக்குமார் எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதோடு அவரது செயல்பாட்டை பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டித்துள்ளன. குறிப்பாக ஆந்திராவில் எதிர்க்கட்சியாக உள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலங்கு தேசம் கட்சி சம்பவம் தொடர்பாகவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+