கவுண்ட் டவுன் தொடங்கியது.. நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் இன்சாட் 3டிஎஸ்.. ஏன் முக்கியம்?
ஐதராபாத்: வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' செயற்கைகோளை ஜிஎஸ்எல்வி. எப்-14 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் அனுப்புகிறது இஸ்ரோ. இதற்கான கவுண்ட் டவுன் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
இந்தியாவில் விண்வெளி ஆய்வுகளை இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் விண்வெளி ஆய்வில் முன்னிலையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த ஆண்டு நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை தரையிறக்கி சர்வதேச நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம், விண்வெளி ஆய்வுகள் மற்றும் காலநிலை மாற்றம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்காக அவ்வப்போது செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் தற்போது இன்சாட் 3டிஎஸ் என்ற செயற்கை கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட் டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' விண்ணில் அனுப்ப பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்ட் மூலம் நாளை மாலை 5 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு பணி முடிந்துள்ளது. இந்த செயற்கைகோளில் முக்கிய ஆய்வு கருவிகள் உள்ளன.
குறிப்பாக இமேஜர்(, சவுண்டர் , டேட்டோ ரிலே டிரான்ஸ்பாண்டர் செயற்கைகோள் உதவியுடன் தேடல் மற்றும் மீட்டு டிராண்பாண்டர் (Satellite aided Search and Rescue Transponder) என 4 முக்கிய கருவிகள் உள்ளன. இதில் இமேஜர் கருவி என்பது 6 வகையான அலைநீளங்களில் பூமியின் போட்டோக்களை எடுத்து வழங்கும். இதன்மூலம் வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தின் அளவை கணக்கீடு செய்ய முடியும்.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட்டுக் கான இறுதிக்கட்டப்பணியான 27 அரை மணி நேர கவுண்ட் டவுன் இன்று பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது. செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி. எப்-14 ராக்கெட் 420 டன் எடை கொண்டது ஆகும்.
51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் 139-டன் உந்துசக்தியைக் கொண்ட திட உந்துசக்தி மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications