இஸ்ரோவில் சேர சூப்பர் வாய்ப்பு.. ஈஸியா அப்ளை பண்ணலாம்.. முழு விவரம் இதோ
ஹைதராபாத்: இஸ்ரோவில் ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் விண்வெளி துறையில் இஸ்ரோ தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது. இதில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த ஆராய்ச்சி விஞ்ஞானி பணி.
சர்வேதச அளவில் விண்வெளித்துறையான வேலை லெவலில் வளர்ந்துக்கொண்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு விண்வெளி துறை இன்றியமையாததாகும். இப்படிப்பட்ட விண்வெளிதுறையில் இஸ்ரோ மாஸ் காட்டி வருகிறது. ஒரு காலத்தில் எது எல்லாம் முடியாது என்று சொல்லப்பட்டதோ அதையெல்லாம் இன்று இஸ்ரோ உடைத்து சுக்கு நூறாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (ஜேஆர்எஃப்), ஆராய்ச்சி விஞ்ஞானி மற்றும் பிற பதவிகளுக்கான ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரின் (NRSC) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. எனவே ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஹைதராபாத்தில்தான் வேலை செய்ய வேண்டியது இருக்கும். இதற்காக விண்ணப்பிப்பதும் எளிதானதுதான். முதலில் https://www.isro.gov.in/ எனும் தளத்திற்கு செல்ல வேண்டும்.
உள்ளே சென்றவுடன் முகப்பு பக்கம் ஓபன் ஆகும். அதில் 'Engage with us' என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால் 'Join ISRO' எனும் ஆப்ஷன் காட்டும். அதை கிளிக் செய்தால் 'Advt. No. NRSC-RMT-1-2023 dated 25/03/2023 inviting online applications for the following posts of Temporary Research Personnel i.e, JRF, RS, RA, PS-I and PA-I' என மூன்றாவதாக ஒரு ஆப்ஷன் இருக்கும். சில நேரங்களில் இது இடம் மாறி கூட இருக்கலாம். அதை கிளிக் செய்தால் பணி விவரங்கள் அனைத்தும் தெளிவாக தெரியும்.
அதேபோல இதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். வேண்டுமெனில் இந்த படிவத்தை பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம். இந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானதாகும். இதற்கு ஏப்ரல் 7ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications