"அட, என்னப்பா.." ஹைதராபாத்தில் சுத்தி சுத்தி வந்த கேமரா.. கடுப்பான காவ்யா மாறன்.. என்ன செய்தார்
ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் காவ்யா மாறன் ஒரு கட்டத்தில் கடுப்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கடைசி நொடி வரை விறுவிறுப்பிற்குப் பஞ்சமே இல்லாத விளையாட்டு என்றால் அது ஐபிஎல் போட்டிகள் தான். முதல் பாலில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி வரை இருக்கும்.
எப்போதும் கிரிக்கெட்டை பார்க்காத நபர்கள் கூட ஐபிஎல் போட்டிகள் வந்தால் ஆர்வமாகப் பார்ப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்- மே காலகட்டத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஐபிஎல் போட்டிகள்: இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் தொடங்கி நடந்து வருகிறது. நேற்றிரவு 14ஆவது லீக் போட்டி நடந்தது. ஹைதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. முதல் இரு போட்டிகளில் தோற்றிருந்ததால் முதல் வெற்றியோ எதிர்நோக்கி ஹைதராபாத் களமிறங்கிய நிலையில், இரு போட்டிகளில் வென்ற தேம்புடன் பஞ்சாப் இறங்கியது. இந்தப் போட்டியில் மயங்க் மார்கண்டே சூழலில் சிக்கி பஞ்சாப் அணி சின்னாபின்னமானது.
ஒரு பக்கம் தவான் தனி ஆளாகப் போராடினாலும் மறுபுறம் மடமடவென விக்கெட்கள் விழுந்தது. ஒரு கட்டத்தில் 88 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 100 தாண்டுவதே கடினம் என்ற சூழல் இருந்த நிலையில், 10வது விக்கெட் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - மோஹித் ரதி பஞ்சாபைக் காப்பாற்றியது. தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்த நிலையில், ஹைதாராபத்திற்கு வெற்றி இலக்காக 144 நிர்ணயம் செய்யப்பட்டது.

கலக்கல் வெற்றி: ஹைதராபாத்திற்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும் கூட, 3ஆவது களமிறங்கிய ராகுல் திரிபாதி 48 பந்தில் 74 பொறுப்புடன் விளையாடி அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில், சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில் வென்று உள்ளூர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஹைதராபாத். நேற்று நடந்த போட்டியைக் காண ஹைதராபாத் மைதானத்திற்குப் பல ஆயிரம் ரசிகர்கள் வந்திருந்தனர். காவ்யா மாறனும் அங்கே வந்திருந்தார்.
சன் நெட்வொர்க்கின் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஹைதராபாத்தில் நடக்கும் பெரும்பாலான போட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுவார். அவர் வரும்போதெல்லாம் கேமரா அவரை சுற்றியே இருக்கும். ஒவ்வொரு பந்திற்கும் அவர் காட்டும் ரிஆக்ஷன்களே அதற்குக் காரணம். ஆனால், தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வியடைந்திருந்ததாலோ என்னவோ நேற்றைய தினம் அவரிடம் வழக்கமான உற்சாகமும் சந்தோஷமும் இல்லை.

கடுப்பான காவ்யா மாற்றான்: இந்த நேரத்தில் கேமராக்களும் தொடர்ந்து அவர் மேலேயே இருக்க ஒரு கட்டத்தில் கடுப்பாகிவிட்டார். அவர் எரிச்சலுடன் "அட என்னப்பா, விடுங்க" (Hatt yaar- Go away, man)" சொல்கிறார். இது கேமராவிலும் பதிவாகியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட் செய்து கொண்டிருந்த நிலையில், அப்போது 19வது ஓவரில் ஷிகர் தவான் 90 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ஐபிஎல் போட்டிகளை காவ்யா மாறன் காண நேரில் வர தொடங்கியது முதலே கேமாரக்கள் அவரை போகஸ் செய்வதைத் தவறியதே இல்லை.. தனது அணி சிறப்பாகச் செயல்படும் போது செம ஹேப்பியாகவும், மோசமாகச் செயல்பட்டால் அதிருப்தியையும் வெளிப்படுத்துவார். அவரது ரிஆக்ஷன் எல்லாமே சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவும். இப்போதும் வெறுப்பில் அவர் சொன்னதும் கூட இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
முதல் இரண்டு போட்டிகளில் ஹைரதாபாத் அணி தோல்வியடைந்திருந்த போதிலும், நேற்றைய போட்டி ஹைரதாபாத் அணிக்கு சூப்பராகவே இருந்தது. டாஸ் முதல் கடைசி பவுன்டரி வரை அனைத்தும் சன் ரைசர்ஸ் அணிக்கு சாதமாகவே இருந்துள்ளது. குறிப்பாக அடில் ரஷித்துக்குப் பதிலாக இறங்கிய லெக்-ஸ்பின்னர் மயங்க் மார்கண்டே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
-
ஐபிஎல் தொடரில் RCB இல்லை? பெயரை மாற்ற புதிய உரிமையாளர்கள் திட்டம்? வந்த திடீர் விளக்கம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications