"சக்ஸஸ்".. எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட்.. 3 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது எஸ்.எஸ்.எல்.வி-டி2

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-07 உள்பட 3 செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.18 மணிக்கு அந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.

பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது... பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரையும் கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

ஏவுகணை

ஏவுகணை

இந்நிலையில் சர்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை இப்போது எழுந்துள்ளது.. அதனால், இதை கருத்தில்கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டுசெல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது... கடந்த வருடம் ஆகஸ்ட் 7ம் தேதி, 2 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோ ப்ளான்

இஸ்ரோ ப்ளான்


ஆனால் இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தவில்லை... ராக்கெட்டின் சென்சார் செயலிழந்து தவறான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது.. அதனால், மீண்டும் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.. இந்நிலையில், இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி - டி2 ரக ராக்கெட்டை புதிதாக வடிவமைத்துள்ளது...

ஆய்வுமையம்

ஆய்வுமையம்

இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக இப்போது, தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோமீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது... ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து இந்த ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

செயற்கைகோள்கள்

செயற்கைகோள்கள்

இதற்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. 3 செயற்கைகோள்களை சுமந்து செல்ல உள்ள அந்த ராக்கெட், 15 நிமிடங்கள் பயணம் செய்து, பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கி.மீ. வட்ட சுற்றுப்பாதையில் 3 செயற்கைகோள்களையும் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளதால், இந்த முறையாவது வெற்றி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எகிறி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+