தெலங்கானாவில் பாதிக்கு பாதி.. காங்கிரஸ் vs பாஜக கடும் மோதல்! விட்டுக்கொடுக்காத ஓவைசி
ஹைதராபாத்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில் தெலங்கானா மாநில லோக்சபா முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக பாதிக்கு பாதி இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.
தேர்தல்: கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.
பாஜக: இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.
பாஜகவை பொறுத்த அளவில், மோடி மீண்டும் பிரதமரானால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை அவர் பெறுவார். அதேபோல, 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்க வேண்டியது முக்கியம்.
காங்கிரஸ்: காங்கிரஸை பொறுத்த அளவில் ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளில் குலாம் நபி ஆசாத் தொடங்கி பல்வேறு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சென்றுள்ளனர். பல மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்திருக்கிறது. எனவே இந்த முறை மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் கட்சி இருக்கிறது. எனவே ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என முரண்பட்ட கட்சிகளை இந்தியா கூட்டணி என இணைத்து தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.
தெலங்கானா: இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் லோக்சபா முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இம்மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மாநில அரசை பொறுத்த வரை காங்கிரஸ்தான் ஆளும் கட்சியாக உள்ளது. எனவே லோக்சபா தேர்தலிலும் இதன் ஓங்குமா? அல்லது பாஜக போட்டி கொடுக்குமா? முன்னாள் முதல்வர் சந்திர சேகரராவின் பிஆர்எஸ் கட்சி முன்னிலை பெறுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இது தவிர ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் சார்பில் ஹைதராபாத்தில் அசாதுதீன் ஓவைசியும் களத்தில் இருப்பதால் தெலங்கானா மாநிலத்தில் முடிவுகள் மீதான பார்ப்பு அதிகரித்திக்கிறது. கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் 12-15 தொகுதிகள் வரை அள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. அதன்படி அதிலாபாத், கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், மல்காஜ்கிரி, செகந்தராபாத், செவெல்லா, மெகபூபாநகர் என 8 தொகுதிகளில் பாஜகவும், பெத்தபள்ளே, ஜாகீராபாத், நாகர்கர்னூல், நல்கொண்டா, போங்கிர், வரங்கல், கம்மம் என 8 இடங்களில் காங்கிரஸசும் முன்னணியில் இருக்கின்றன.
வழக்கம் போல அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத் தொகுதியில் முன்னணியில் இருக்கிறார். மொத்தமுள்ள 17 தொகுதிகளில் கடந்த முறை சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 9 இடங்களை வென்றிருந்தது. ஆனால் இந்த முறை ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications