ஆந்திர முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஜெகன் மோகன் ரெட்டி! தொண்டர்கள் உற்சாகம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Jagan Mohan Reddy Oath: ஆந்திர முதல்வராக முதல்முறையாக பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி- வீடியோ

    ஹைதராபாத்: ஆந்திரமாநில முதல்வராக ஒய்எஸ்ஆர்சி கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்றார்.

    ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் இரு தேர்தல்களிலுமே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி கட்சி அமோக வெற்றி பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழா விஜயவாடாவில் திறந்தவெளி மைதானத்தில் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது.

    பதவிப்பிரமாணம்

    பதவிப்பிரமாணம்

    ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளுநர் நரசிம்மன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    தீவிர ஏற்பாடுகள்

    தீவிர ஏற்பாடுகள்

    இந்த பதவியேற்பு விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

    டெல்லி பயணம்

    டெல்லி பயணம்

    ஜெகனின் பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். முதல்வராக பதவியேற்ற கையோடு ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லி புறப்படுகிறார்.

    முதல்முறையாக சிஎம்

    முதல்முறையாக சிஎம்

    இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்கவுள்ளார். ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி முதல்முறையாக பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஜூன் 6ல் அமைச்சர்கள்

    ஜூன் 6ல் அமைச்சர்கள்

    இன்று ஜெகன் மோகன் ரெட்டி மட்டுமே பதவியேற்றார். அவரது அமைச்சரவை வரும் 6ஆம் தேதி பதவியேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் பதவியேற்கும் போது அக்கட்சியினர் மகிழ்ச்சி மிகுதியில் கத்தி ஆரவாரம் செய்தனர்.

    உற்சாக வரவேற்பு

    உற்சாக வரவேற்பு

    பதவியேற்பு விழாவுக்காக திறந்தவெளி ஜீப்பில் வந்த ஜெகனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி தொடங்கிய 9 ஆண்டுகளில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார் ஜெகன். ஜெகனின் பதவியேற்பு விழாவில் அவரது தயார் விஜயம்மா கலந்துகொண்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+