ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி? 11 மாநில பாஜக தலைவர்கள் கூட்டம்- நட்டா யோசனைக்கு பெரும் ஆதரவு!
ஹைதராபாத்: தமிழ்நாட்டின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவதற்கு தென்னிந்திய மாநில பாஜக தலைவர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களின் பாஜக தலைவர்கள், தேசிய பொதுச்செயலாளர்கள் பங்கேற்ற மிக முக்கியமான ஆலோசனை கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா நேற்று நடத்தினார். ஜேபி நட்டா கூட்டிய இக்கூட்டத்தில் மொத்தம் 34 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தென்னிந்தியாவில் பாஜகவை வலிமைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை ஜேபி நட்டா, மாநில தலைவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

மேலும் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவது தொடர்பாகவும் 11 மாநில பாஜக தலைவர்களிடம் ஜேபி நட்டா கருத்து கேட்டார். இதற்கு பெரும்பாலான தலைவர்கள், தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். மேலும் ராமநாதபுரம் தொகுதியில் கணிசமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். அப்படியான ஒரு தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெல்வதன் மூலமாக இந்துக்களின் வாக்கு வங்கி என்பது ஒருமுகப்படுத்தப்பட்டு பிரதமர் மோடிக்குதான் ஆதரவாக இருக்கிறது என்பதை தென்னிந்திய மக்களுக்கு சுட்டிக்காட்ட முடியும். அதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் எனவும் பாஜக மாநில தலைவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் தென்னிந்தியாவில் பாஜக 50-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்பதையும் இக்கூட்டத்தில் ஜேபி நட்டா வலியுறுத்தினாராம். அத்துடன், மாநிலங்களில் பாஜக தலைவர்களிடையேயான கோஷ்டி பூசலுக்கு முடிவுகட்டி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் 2024 லோக்சபா தேர்தலில் வெல்லவும் முடியும் எனவும் ஜேபி நட்டா அறிவுரை வழங்கி இருக்கிறார்.
பாஜக மேலிடத்தின் சார்பாக பொதுச்செயலாளர்கள் பிஎல் சந்தோஷ், தருண் சுக், சுனில் பன்சால், வி. சதீஷ், தெலுங்கானா மாநில புதிய பாஜக தலைவர் கிஷன் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் டிகே அருணா, ராஜ்யசபா எம்பி லக்ஷ்மண், முன்னாள் மத்திய அமைச்சரும் தெலுங்கானா பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications