டெல்லி மதுபான கொள்கை வழக்கு! அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகமாட்டேன்.. கேசிஆர் மகள் கவிதா உறுதி
ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதா இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளதால் அமலாக்கத்துறை முன்பு தான் ஆஜராகப் போவதில்லை என்று கவிதா கூறியுள்ளார்
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்களின் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். இந்த புகாரை டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் சில அரசு அதிகாரிகள் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் சிசோடியா தொடர்புடைய 21 இடங்களில் சிபிஐ ரெய்டு மேற்கொண்டது. இந்த ரெய்டு குறித்து இன்று சிசோடியா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், "மத்திய அரசுக்கு ஊழல் குறித்து கவலை இல்லை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்துதான் கவலை" என்று கூறியுள்ளார். மேலும், ரெய்டு நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அதேபோல மார்ச் மாதம், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலும் அவரை சிபிஐ கைது செய்தது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது சிசோடியா ஊழலில் ஈடுபட்டிருந்தபோது 14 செல்போன்கள் மற்றும் 43 சிம்கார்டுகளை பயன்படுத்தியிருந்ததாகவும், ஆனால் விசாரணை தொடங்கியபோது இவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டின.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், இந்த வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதா தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டது. இவரிடம் கணக்காளராக வேலை பார்த்ததாக கூறப்படும் புஜ்ஜிபாபு, "டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிஷோடியா ஆகியோருக்கு இடையே கவிதாவுக்கு அரசியல் புரிந்துணர்வு இருந்தது" என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார். எனவே அமலாக்கத்துறையின் பிடி கவிதா மீது இறுகியுள்ளது.
ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் விசாரணைக்காக அவர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகியிருந்த நிலையில், தற்போது இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக இது தொடர்பாக நேற்று பேட்டியளித்திருந்த கவிதா, "தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. தெலங்கானாவிலும் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த விசாரணை அமைப்புகளை பாஜக தற்போது ஏவி விட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 15ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்ட நோட்டீஸ். பிஆர்எஸ் கட்சி எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது என்று கவிதா கூறியுள்ளார். கட்சியின் சட்ட பிரிவு மூலம் நாங்கள் இதனை எதிர்கொள்வோம். 2ஜி வழக்கு கூட இத்தனை ஆண்டுகளாக நடைபெற்றது கிடையாது என்று நினைக்கிறேன். பாஜக பின்வாசல் வழியாக ஊடுருவ முயல்கிறது" என்றும் கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.
"உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளதால் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு நான் ஆஜராக மாட்டேன். என் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள்" என்றும் கவிதா தெரிவித்துள்ளார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications