கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் தொகுதிகளை அள்ளிக் குவித்த டிஆர்எஸ்! ஏறுமுகத்தில் கேசிஆர்!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் கடந்த ஆண்டு தேர்தலை காட்டிலும் இந்த ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆந்திரத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இது நீண்டகாலமாக கோரி வந்த நிலையில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி மாநிலத்தை தனியாக பிரித்தது.

வெற்றி
இதையடுத்து அந்த மாநிலத்துக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அந்த மாநிலத்துக்காக போராடிய கே சந்திரசேகர ராவ் வெற்றி பெற்றார். அப்போது அவரது கட்சி 63 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களிலும் பாஜக 5 இடங்களிலும் ஒய்எஸ்ஆர் காங் 3, பகுஜன் சமாஜ் 2, மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

வாக்குகள்
இந்த மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருந்த நிலையில் முன்கூட்டியே நடத்த வேண்டும் என கோரி ஆட்சியை கலைத்தார். இதன் பின்னர் டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

87 இடங்களில்
அதில் டிஆர்எஸ் 87 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியோ 21 இடங்களிலும் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களிலும் மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

முடிவுகள்
எனவே இது கடந்த தேர்தலை காட்டிலும் அதிகமாக தொகுதிகளில் டிஆர்எஸ் வெற்றி பெறும் என தெரிகிறது. மொத்தம் 119 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துவிட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications