கேசிஆர் போல கோலி.. “தோற்கடிக்கவே முடியாது” கவிதா போட்ட X பதிவு.. கிண்டல் செய்த தெலுங்கானா காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: விராட் கோலியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவோடு ஒப்பிட்டு அவரது மகள் கவிதா சமூக வலைதளத்தில் பதிவிட, அதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி. நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.

 KCRs daughter Kavitha compares Virat Kohli with KCR: Congress reacts

இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சர்வதேச ஒருநாள் சதம் என்ற சாதனையை அவரின் கண் முன்னரே முறியடித்தார். இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டம் காரணமாக இந்திய அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிச்சேல் ஆகியோர் ஜோடி சேர்ந்து அந்த அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். ஆனால், முகமது ஷமியின் அபார பந்துவீச்சில், முக்கியமான நேரத்தில் முக்கிய விக்கெட்களை இழந்தது நியூசிலாந்து. 7 விக்கெட்களை அள்ளி, நியூசிலாந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் ஷமி. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியையும், விராட் கோலியின் வரலாற்றுச் சாதனையையும் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் கேசிஆரின் மகளும், அம்மாநில எம்.எல்.சியுமான கவிதா எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "முதல்வர் கேசிஆரை போல விராட் கோலியும் தோற்கடிக்க முடியாதவர். மாஸ்டர்கள் களத்தில் நிற்கும் போதெல்லாம் அங்கு மாயாஜாலம் நிகழ்கிறது" என்று தெரிவித்தார். மேலும், கேசிஆர், கோலி இடம்பெற்ற படத்தையும் பகிர்ந்திருந்தார்.

 KCRs daughter Kavitha compares Virat Kohli with KCR: Congress reacts

கிரிக்கெட்டில் வியத்தகு சாதனை புரிந்த விராட் கோலியை, தெலுங்கானா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சந்திரசேகர் ராவ் உடன் ஒப்பிட்டு கவிதா பதிவிட்டதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டுக்காக விளையாடுவதற்கும், கமிஷனுக்காக செயல்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது" என்று கூறியுள்ளது.

மேலும் மற்றொரு பதிவில், "கிரிக்கெட்டில் விராட் கோலியை மிஞ்ச யாருமில்லை. காலேஸ்வரம் ஊழலில் கேசிஆரை மிஞ்ச ஒருவரும் இல்லை." என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. தெலுங்கானாவில் தேர்தல் நெருங்கும் சூழலில், உலகக் கோப்பை கிரிக்கெட் ஃபீவரும் உச்சத்தில் இருப்பதால், கிரிக்கெட்டை மையமாக வைத்து அரசியல் பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

தெலுங்கானா சட்டப்பேரவைக்கு இந்த மாதம் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி பயங்கர டஃப் கொடுத்து வருகிறது. பாஜகவும் தெலுங்கானாவில் காலூன்ற கடுமையாக முயன்று வருகிறது. இந்நிலையில், விராட் கோலியை வைத்து பிஆர்எஸ் - காங்கிரஸ் கட்சி ஆகியவை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+