Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களுக்கான இலவச பஸ் சேவை.. L&T இயக்குநர் ஷங்கர் ராமன் கடும் விமர்சனம்.. எடுத்த பெரிய முடிவு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை வழங்கப்படுவதால், மெட்ரோ சேவையின் மீதான சுவராஸ்யம் குறைந்துவிட்டது என்று எல் அண்ட் டி நிர்வாக இயக்குனர் ஷங்கர் ராமன் விமர்சித்துள்ளார்.

மேலும் 2026க்கு பிறகு ஹைதராபாத்தில் நடைபெறும் மெட்ரோ திட்ட பணிகளில் எல் அண் டி விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

L amp amp T director Shankar Raman plans to quit Hyderabad Metro and blames free bus rides

தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட மகளிருக்கான இலவச பயணம் அதன் பின்னர் கர்நாடகா மாநிலத்திலும், இப்போது தெலுங்கானாவிலும் செயல்படுத்தப்படுகிறது. மெட்ரோ ரயில் பயணங்கள், இலவச பேருந்து திட்டத்தால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாக எல்அண்ட் டி நிறுவனம் விமர்சித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை புறநகர் ரயில்கள் எல்லா முக்கிய வழித்தடங்களிலும் இருக்கிறது. இதுதவிர புறநகர் ரயில் வழித்தடம் இல்லாத பகுதிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர மெட்ரோ ரயில்கள் மேலும் 3 வழித்தடங்களில் ஓடப்போகிறது.

2027 முதல் சென்னை முழுக்க மெட்ரோ ரயில்கள் ஓடப்போகின்றன. தற்போது இரண்டு வழித்தடங்களில் மட்டுமே ஓடும் மெட்ரோவில் ஒரு மாதத்திற்கு 75 லட்சம் முதல் 90 லட்சம் வரை பயணிகள் பயணிக்கிறார்கள். சென்னை மெட்ரோ முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் போது 2 கோடி அளவிற்கு பயணிகள் ஒரு மாதத்தில் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நிலைமை இப்படியாக இருக்க.. தெலுங்கானான மாநிலம் ஹைதாராபாத்தில் சென்னையைப் போல் எல்லா வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் இல்லை.. மிக சிறிய அளவில் தான் புறநகர் ரயில்கள் ஓடுகின்றன. ஆனால் நகரமோ மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் பயணம் இங்கு பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

L amp amp T director Shankar Raman plans to quit Hyderabad Metro and blames free bus rides

ஆனால் ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை பொது-தனியார் கூட்டாண்மை முறையில் கையாண்டு வரும் லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்த திட்டத்தை வேறு யாரிடமாவது விற்றுவிடுவது குறித்து பரிசீலித்து வருகிறது .

எல் அண்ட் டி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்தே தங்களுடைய கடன் சுமையைக் குறைப்பதற்காகவும், மற்ற காரணங்களுக்காகவும் மெட்ரோ திட்டத்தில் இருந்து விலகுவது பற்றி பேசிவந்தார்கள். இந்நிலையில் எல்டி நிறுவன தலைவர் ஆர் சங்கர் ராமன், ஹைதராபாத்தில் மெட்ரோ ரயிலில் பெண்கள் குறைவாகப் பயணிப்பதற்கு, தெலுங்கானா மாநில அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய இலவச பேருந்து பயணத் திட்டம் காரணம் என்று குற்றம் சாட்டினார் .

சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், எல் அண் டி தலைவரும், முழு நேர இயக்குனருமான, தலைமை நிதி அதிகாரியுமான ஆர்.சங்கர் ராமன், தெலுங்கானா காங்கிரஸ் அரசு 'மகாலட்சுமி திட்டம்', என்ற பெயரில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத்தை வழங்கியதால், மெட்ரோவில் பெண் பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஷங்கர் ராமன் இதுபற்றி கூறும் போது, "காங்கிரஸ் அரசின் இலவசப் பேருந்து பயணத் திட்டம் 'நிலையானதல்ல' . அரசியல் வாக்குறுதிகளின் பின்னணியில் இப்படி செய்கிறது. இது தெலுங்கானா மாநில நிதியை மேம்படுத்த உதவப் போவதில்லை. மாநில போக்குவரத்துக் கழகத்தை திவாலாக்குவதில் என்ன பயன்? மாசுபடுத்தும் பேருந்துகளை மக்களைப் பயன்படுத்துவதற்கு மாநில அரசு பணம் செலவழிக்கிறது.

இலவச பேருந்து உயர்வு திட்டம் பொது போக்குவரத்தில் பாலின பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது. பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கிறார்கள் ஆண்கள் பயணத்திற்கு சராசரியாக 35 ரூபாய் செலுத்துகிறார்கள். ஹைதராபாத் மெட்ரோவில் தற்போது தினமும் சுமார் 4.8 லட்சம் பேர் மெட்ரோவை பயன்படுத்துகின்றனர். இந்த திட்டத்தால் ஏற்பட்ட பெரும் சுமையை குறைக்க வேண்டும்" என்றார்.

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் அடிக்கடி விவாதங்களைக் கிளப்பி வருகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், அவர்களின் பயணங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காகவும், பொது இடங்களுக்குச் செல்வதற்காகவும் இலவச பயணம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில்,'ஒரு சிலர் மாநில அரசின் கடன் சுமையை அதிகரிக்கும் திட்டம் என்று கூறி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்களும் இந்தத் திட்டத்தால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆட்சிக்கு வந்த உடனேயே, ஹைதரபாத்தில் நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ பணிகளை நிறுத்தி வைத்துவிட்டு, பாதைத் திட்டங்களை மாற்றி அமைத்தார், மேலும் L&T மெட்ரோ ரயில் ஹைதராபாத் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சலுகைகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, இலவச பேருந்து பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே ஹைதராபாத் மெட்ரோ நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஜூன் 2021 இல், எல்&டி மெட்ரோ ரயில் அதிகாரிகள் நிதி உதவி கோரி அப்போதைய முதல்வர் கே சந்திரசேகர் ராவைச் சந்தித்து பேசினார்கள். 2021ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் நிறுவனம் ரூ.400 கோடி நஷ்டத்தை பதிவு செய்துள்ளதாக எல் அண்ட் டி அப்போது தெரிவித்திருந்தது.

மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்காதது, பீக் ஹவர்ஸில் நெரிசலைக் கையாளாதது, மெட்ரோவை நீட்டிக்கத் தவறியது போன்ற தவறுகளை எல்அண்ட் டி செய்தது தான் ஹைதராபாத் மெட்ரோ திட்டத்தின் இந்த நிலைக்கு காரணம் என்கிறார்கள் சிலர்.

உலக வள நிறுவனத்தில் (WRI) ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஃபெலோ மற்றும் நிலையான இயக்க வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் அலவில்லி, இலவச பொது போக்குவரத்துக்கு எதிரான ஷங்கர் ராமனின் புகாரை இலவச பள்ளிக் கல்வியுடன் ஒப்பிட்டார்.

இதுபற்றி பேசுகையில், "மெட்ரோ மற்றும் பேருந்துக்கு வெவ்வேறு பயணிகள் இருக்கிறார்கள் இந்தியா வளரும் போது இரண்டும் ஒவ்வொரு நகரத்திலும் வளர நிறைய வாய்ப்புகள் உள்ளன. எல்&டி மற்ற காரணங்களுக்காகவும், இதை ஒரு சாக்காகவும் வைத்து வெளியேற விரும்புகிறது," என்றார். இதனிடையே 2026ம் ஆண்டுக்கு பிறகு ஹைதராபாத்தில் நடைபெறும் மெட்ரோ திட்ட பணிகளில் எல் அண் டி விலகுவதாக சங்கர் ராமன் அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+