3 நாட்களுக்கு பின் வந்த ரிப்போர்ட்.. விசாகப்பட்டினம் விஷவாயு கசிவுக்கு என்ன காரணம்?.. என்ன நடந்தது?
விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவு விபத்துக்கு என்ன காரணம் என்று அந்த நிறுவனம் முதல்கட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஹைதபராபாத்: விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவு விபத்துக்கு என்ன காரணம் என்று எல்ஜி பாலிமர் நிறுவனம் முதல்கட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Recommended Video
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் மூன்று நாட்களுக்கு முன் விஷவாயு விபத்து ஏற்பட்டது. கொரோனாவிற்கு இடையில் ஏற்பட்ட இந்த விபத்து உலகையே உலுக்கியது.
ஆர்ஆர் வேங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் இந்த விபத்து அதிகாலை 3மணிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமம் முழுக்க விஷவாயு பரவியது. மொத்தம் 3 கிமீ பகுதிக்கு இந்த விஷவாயு பரவியது.

பாலியானார்கள்
இந்த விஷவாயு தாக்குதல் காரணமாக மொத்தமாக 5000 பேர் வரை மயக்கம் அடைந்தனர். பலர் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். இன்னும் பலர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷவாயு கசிவு காரணமாக 11 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆலையை மூட வேண்டும் என்று அங்கு மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

வாயு வெளியானது
அங்கு ஏற்பட்ட விபத்தில் மிக மோசமான ஸ்டைரீன் (styrene) எனப்படும் வாயு வெளியாகி உள்ளது. இது பொதுவாக பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வாயு ஆகும். பிளாஸ்டிக் உருவாக்கத்தின் போது இதை அதிகமாக பயன்படுத்துவார்கள். இதை நேரடியாக சுவாசிப்பது மிகவும் கொடுமையானது. உயிருக்கே இந்த வாயு ஆபத்து விளைவிக்கும். இந்த வாயுவை 20 டிகிரி வெப்பநிலையில் எப்போதும் வைக்க வேண்டும்.

எப்படி வெடித்தது
ஆனால் லாக்டவுன் காரணமாக இதை 20 டிகிரி வெப்பநிலையில் வைக்க முடியவில்லை. அங்கு வெப்பநிலை அதிகமாகி உள்ளது. இதனால் கடைசியில் மீண்டும் ஆலையை திறக்கும் போது திடீர் என்று அந்த வாயுவை வைத்திருந்த 3000 டன் டேங்க் வெடித்து இருக்கிறது. அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக இந்த டேங்க் வெடித்து வாயு வெளியாகி உள்ளது என்று கூறுகிறார்கள்.

ஆனால் மறுப்பு
ஆனால் இந்த விஷயத்தை தற்போது எல்ஜி பாலிமர் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் முதல்கட்ட ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. 3 நாட்களுக்கு பின் வெளியாகி உள்ள அறிக்கையில், இந்த வெப்பநிலை செயல்பாடு பல வருடமாக எங்கள் நிறுவனத்தில் உள்ளது. டேங்கின் கீழ் பகுதியில் 20 டிகிரி வெப்பநிலை இருக்கும். லாக்டவுன் நேரத்திலும் அது பின்பற்றது. அதில் தவறு இல்லை.

மேல் பகுதி எப்படி
அந்த வாயு இருக்கும் டேங்கின் மேல் பகுதியில் 20 டிகிரி வெப்பநிலை இருக்காது. அது எப்போதும் உள்ளதுதான். அங்கும் தவறு நடக்கவில்லை. இந்த டேங்கில் இருந்து ஸ்டைரீன் ஆவி வெளியாகி உள்ளது. ஸ்டைரீன் வாயு அங்கிருந்து ஆவியாக கசிந்து இருக்கிறது. Styrene Monomer எனப்படும் டேங்கில் இருந்து வாயு ஆவியாக கசிந்துள்ளது. இதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இப்படி அந்த வாயு ஆவியாக நிறைய காரணம் இருக்கலாம். இது எப்படி ஆவியானது என்று விசாரித்து வருகிறோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications