ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்து எறிந்த வேட்பாளர்.. ஆந்திராவில் பரபர!

ஆந்திராவில் ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் வாக்குபதிவு எந்திரத்தை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections: ஆந்திராவில் பல பூத்களில் வேலை செய்யாத வாக்குபதிவு எந்திரம் | எந்திரத்தை உடைத்து எறிந்த வேட்பாளர்-வீடியோ

    ஹைதராபாத்: ஆந்திராவில் ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் வாக்குபதிவு எந்திரத்தை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் இந்த செயலுக்கு பின் மிக முக்கியமான காரணமும் இருக்கிறது மக்களே!

    லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஆந்திராவில் நடந்து வருகிறது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை இடங்கள் உள்ளது. அனைத்திற்கும் இன்றும் தேர்தல் நடக்கிறது. அங்கு மொத்தம் 3.93 கோடி பேர் இன்று வாக்களிக்க இருக்கிறார்கள்.

    ஆந்திராவில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அங்கு ஒரு வாக்குசாவடியில் வித்தியாசமான பிரச்சனை ஒன்றும் நடந்துள்ளது.

    அசத்தும் தேர்தல் ஆணையம்.. அதிகாலையில் வாக்களித்த 5 பேருக்கு பதக்கம்.. வாக்காளர்கள் உற்சாகம்! அசத்தும் தேர்தல் ஆணையம்.. அதிகாலையில் வாக்களித்த 5 பேருக்கு பதக்கம்.. வாக்காளர்கள் உற்சாகம்!

    ஜன சேனா கட்சி

    ஜன சேனா கட்சி

    ஆந்திர பிரதேசத்தில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் மிக முக்கியமான கட்சியாக மாறியுள்ளது. தேர்தலில் இவரது கட்சியும் தீவிரமாக போட்டியிடுகிறது. இந்த நிலையில் அவரின் ஜன சேனா கட்சி வேட்பாளர் செய்த விஷயம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    வேட்பாளர் மதுசூதன் குப்தா

    வேட்பாளர் மதுசூதன் குப்தா

    ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா. இவர் அனந்தப்பூர் தொகுதியில் ஜனசேனா சார்பாக போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று காலை அவர் அனந்தப்பூர் தொகுதியில் உள்ள கோட்டி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தார். ஆனால் வாக்களிக்க வந்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது.

    மதுசூதன் குப்தா கடும் கோபம்

    வாக்குப்பதிவு எந்திரத்தில் அவரது பெயர் தவறாக எழுதப்பட்டு இருக்கிறது. மதுசூதன் குப்தா என்பது சில வார்த்தை பிழைகளுடன் இருந்துள்ளது. அதேபோல் பெயரும் மற்றவர்களை விட மிகவும் சிறியதாக எழுதப்பட்டு இருக்கிறது. இதை பார்த்தும் மதுசூதன் குப்தா கடும் கோபம் அடைந்தார்.

    தூக்கி போட்டு உடைத்தார்

    தூக்கி போட்டு உடைத்தார்

    இதையடுத்து மதுசூதன் வாக்குபதிவு எந்திரத்தை தூக்கி போட்டு அங்கேயே உடைத்தார். கோபத்தில் வாக்களிக்கும் போது எந்திரத்தை உடைத்து நொறுக்கினார். வாக்குப்பதிவு எந்திரத்தில் தனது பெயர் சரியாக இல்லை என்று கூறி அதிகாரிகளுடன் சண்டை போட்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Jana Sena candidate Madhusudhan Gupta broke the EVM alleging his name was not properly written on EVM In Andhra’s, Anantapur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X