ஆந்திராவில் மவுசு குறையாத ஜெகன்.. யாருக்கு வெற்றி வாய்பு.. Democracy Times பரபர சர்வே முடிவுகள்
ஐதராபாத்: ஆந்திரா மற்றும் கோவா மாநிலங்களில் இன்றைய தேதிகளில் லோக்சபா தேர்தல் நடைபெற்றால் எந்தக் கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறித்து Democracy Times கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரத்தை பார்க்கலாம்.
ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறது. அந்திராவில் தேசிய கட்சிகளை விட மாநில கட்சிகளே வலுவாக உள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்குக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

அண்மையில் சந்திரபாபு நாயுடுவை திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் ஆந்திர போலீசார் கைது செய்தனர். தற்போது நீதிமன்ற காவலில் சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்துள்ள மனு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிராக ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதனால், ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. வரும் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கைது விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இன்றைய தேதியில் தேர்தல் நடைபெற்றால் எந்தக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து Democracy Times கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 25 இடங்களில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கே 14 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் விவரம் வருமாறு:
ஆந்திர பிரதேசம் கருத்துக் கணிப்பு முடிவுகள்:-
மொத்த இடங்கள்; 25
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் - 14 இடங்கள்
தெலுங்கு தேசம் - 11 இடங்கள்
பிற கட்சிகள் : 00
அதேபோல், பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கோவாவில் மொத்தம் 2 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலுமே பாஜக வெற்றி பெறும் என்று Democracy Times கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இன்றைய தேதியில் லோக்சபா தேர்தல் நடந்தால் எந்த கட்சி வெற்றி பெறும் என்று Democracy Times கருத்துக் கணிப்பு முடிவுகள் வருமாறு:-
கோவா கருத்துக் கணிப்பு முடிவுகள்:-
மொத்த இடங்கள் - 02
என்.டி.ஏ - 02
ஐ.என்.சி - 00
பிற கட்சிகள் - 00.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications