ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏழைகளுக்கு 50% தள்ளுபடி.. உலகத்தரமான சிகிச்சை.. வியப்பூட்டும் எல்வி பிரசாத் கண் மருத்துவமனை!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் மாதாபூர் பகுதியில் இயங்கி வரும் எல்வி பிரசாத் கண் மருத்துவமனை ( LV Prasad Eye Institute -LVPEI) உலகத்தரமான சிகிச்சையை அனைத்து விதமான மக்களுக்கும் வழங்கி வருகிறது.

ஹைதராபாத்தின் காவுரி ஹில்ஸ் பகுதியில் உள்ள மாதாபூரில் இயங்கி வரும் கண் மருத்துவமனைதான் எல்வி பிரசாத் கண் மருத்துவமனை ( LV Prasad Eye Institute -LVPEI). ஹைதராபாத் கண் இன்ஸ்டிடியூட் (Hyderabad Eye Institute -HEI) கீழ் இயக்கப்பட்டு வரும் இந்த மருத்துவமனை சர்வதேச தரத்தில் மருத்துவத்தை அளித்து வருகிறது.

LV Prasad hospital gives an excellent, equitable eye care treatments to all sections of people

1987ல் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை அனைத்து விதமான கண் பிரச்சனைகளையும் கடந்த 34 வருடமாக தீர்த்து வருகிறது. சமத்துவம், தரம், செயல்திறன் ஆகிய மூன்று விஷயங்களை குறிக்கோளாக வைத்து இந்த எல்வி பிரசாத் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது.

சமத்துவம் - பணம் இருக்கிறதோ இல்லையோ, அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான, ஒரே தரத்திலான சிகிச்சையை கொடுப்பது. தரம் - மருத்துவ உலகில் இருக்கும் தரமான மருத்துவ சாதனங்கள், மருந்துகள், கருவிகள், சிகிச்சை முறைகளை வைத்து சிகிச்சை அளிப்பது. செயல்திறன் - ஒடிசா, தெலுங்கானா., ஆந்திர பிரதேசம், கர்நாடக என்று எல்வி பிரசாத் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் தரமான மருத்துவம் கொடுப்பது ஆகிய மூன்று குறிக்கோளை கொண்டு இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.

கண் பார்வையை சரி செய்வது, கண் திறனை அதிகரிப்பது, சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட பல சிகிச்சைகள் எல்வி பிரசாத் கண் மருத்துவமனை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அடிமட்டத்தில் இருக்கும் மக்களும் எளிதாக சிகிச்சை பெறும் வகையில் எல்வி பிரசாத் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. எல்வி பிரசாத் கண் மருத்துவமனையின் விஷன் சென்டர் மூலம் கிராமப்புறங்களில் ஆரம்ப கண் சோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

வறுமையான பின்னணி கொண்ட 50% பேர் இதுவரை எல்வி பிரசாத் கண் மருத்துவமனை மூலம் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த சில வருடங்களில் மட்டும் பல ஆயிரம் பேர் எல்வி பிரசாத் கண் மருத்துவமனை சிகிச்சை மூலம் பலன் பெற்று கண் பார்வையை திரும்ப பெற்றுள்ளனர். இவர்களுக்கு செய்யப்பட்ட இலவச சிகிச்சைக்காக பல நல்ல உள்ளங்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள் நிதி உதவி அளித்துள்ளன.

கண்ணில் பூ விழுந்தது தொடங்கி கேன்சர் வரை பல விதமான நோயாளிகளோடு வந்தவர்களில் 50% பேருக்கு இலவச சிகிச்சை பெற்றுள்ளது. ஒடிசா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகாவில் உள்ள 200க்கும் மேற்பட்ட எல்வி பிரசாத் கண் மருத்துவமனை மையங்களில் இந்த சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு எதிராக எல்வி பிரசாத் கண் மருத்துவமனை மூலம் எடுக்கப்பட்ட சில ஆக்கபூர்வமான முயற்சிகள்:

வறுமையான பின்னணியை கொண்ட மக்களுக்கு தொடர்ந்து 50% மருத்துவம் தரம் மாறாமல் இலவசமாக வழங்கப்பட்டது.

அவசர அறுவை சிகிச்சை செய்யும் வசதி கொண்ட எமர்ஜன்சி கேர் உருவாக்கப்பட்டது.

போன், ஆன்லைன் மூலம் மருத்துவர்களிடம் பாலோ அப் செய்யம் வசதி ஏற்படுத்தப்பட்டது.

முகத்தை மூடிக்கொள்ள பயன்படும் ஓஎஸ் வைசர் கவசம், வெண்டிலேட்டர் ஆகியவை குறைந்த விலையில் உருவாக்கப்பட்டுள்ளது. கண் பார்வை குறைபாடு உள்ளவரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது.

பிறக்கும் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

2900 ஊழியர்கள் பணி நீக்கம் சம்பள குறைப்பு செய்யப்படாமல் வேலை செய்து வருகிறார்கள்.

English summary
LV Prasad hospital gives an excellent, equitable eye care treatments to all sections of people in a society.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X