போலீஸாரின் கன்னத்தில் அறைந்த ஆந்திர முதல்வர் ஜெகனின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அதிரடி கைது
ஹைதராபாத்: தெலுங்கானா போலீஸார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா அறைந்ததை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார், தெலுங்கானாவிலும் அடுத்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைய ஒய் எஸ் ஷர்மிளா ஒய். எஸ்.ஆர். தெலுங்கானா எனும் கட்சியை தொடங்கினார்.

இதையடுத்து அந்த மாநில அரசை கண்டித்து அவ்வப்போது போராட்டம், நடைப்பயணம் என ஷர்மிளா இருந்து வருகிறார். ஏற்கெனவே தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் கடந்த மாதம் 10 மணி நேரமாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையும் சுட்டிக்காட்டி ஷர்மிளா மக்களை சந்தித்து வருகிறார். திடீர் போராட்டங்களை நடத்தும் அவர் அவ்வப்போது கைதாகியும் வருகிறார். இந்த நிலையில் தெலுங்கானாவில் மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள் கடிந்தது.
இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக போராட்டம் நடத்துவதற்காக ஹைதராபாத்திற்கு ஷர்மிளா சென்றார். இதையறிந்த போலீஸார் அவரை போக விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஷர்மிளா அந்த போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஷர்மிளாவின் கையை பிடித்து அவரை தடுத்த பெண் போலீஸை கீழே தள்ளிவிட்டார். பின்னர் பெண் போலீஸாருடனும் கடும் மோதல் போக்கில் இருந்தார். மேலும் பெண் போலீஸ் ஒருவரை பளார் என கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த சம்பவத்தை அடுத்து ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்ட போதிலும் போலீஸாரை பணி செய்ய விடாமல் பிடித்து தள்ளிவிட்டார். இதையடுத்து ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் உள்ள ஷர்மிளாவை சந்திக்க அவரது தாய் விஜயம்மா சென்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினார். ஆனால் விஜயம்மா கோபமடைந்து பெண் போலீஸ் ஒருவரின் கையை முறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஷர்மிளாவும் அவருடைய தாய் விஜயம்மா ஆகியோர் போலீஸாரை மாற்றி மாற்றி தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் ஷர்மிளாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது ஜெய் ஷர்மிளா அக்கா என அவருடைய ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு












Click it and Unblock the Notifications