விந்தணுவை ஐஸ்கிரீமில் கலந்து விற்ற இளைஞர்.. முகம் சுளிக்க வைக்கும் செயல்.. வீடியோவால் அதிர்ச்சி!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சாலையோரம் ஐஸ்கிரீம் விற்கும் ஒருவர் தனது விந்தணுவை பலூடாவில் கலந்து ஷாக் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
என்ன தான் 5 ஸ்டார் ஹோட்டல்கள் வந்தாலும் கூட நம்ம தெருவோர கடைகளுக்கு அவை எப்போதும் ஈடாகாது. இன்று 5 ஸ்டார் ஹோட்டல்கள் வைத்திருக்கும் பலரும் தங்கள் பயணத்தைச் சாலையோர கடைகளில் இருந்து தான் ஆரம்பித்து இருப்பார்கள்.

பலரும் குறைந்த விலையில் நல்ல டேஸ்டான உணவைக் கொடுப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால், சாலையோர கடைகளில் சிலர் மிக மோசமான முறையிலும் உணவைத் தயாரித்து விற்கிறார்கள்.
ஷாக் சம்பவம்: இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள வாரங்கலில் ஐஸ்கிரீம் விற்பனையாளர் ஒருவர் சிறுநீர் மற்றும் தனது விந்தணுக்களைக் கலந்து ஐஸ்கிரீமை விற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
கோடைக்காலம் என்றாலே ஐஸ்கிரீம் தேவையும் விற்பனையும் அதிகரித்துவிடுகிறது. பல இடங்களில் வெப்பத்தைத் தணிக்கப் பொதுமக்கள் ஐஸ்கிரீம்களை தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். ஆனால், சிலர் மிக மோசமான சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். நாம் எடுத்துக் கொள்ளவே கூடாத ஆசிட் மற்றும் தரமற்ற பொருட்களால் செய்யப்பட்ட ஐஸ்கிரீம்களை கூட அவர்கள் விற்பனை செய்கிறார்கள். இதனால் பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது.
எங்கே நடந்தது: ஆனால், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நடந்த சம்பவம் முகம் சுளிக்க வைப்பதாக இருக்கிறது. இது மற்ற சம்பவங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதாக இருக்கிறது. வாரங்கல் மாவட்டம் நெகொண்டா பகுதியில், பாலாஜி என்ற ஐஸ்கிரீம் கடையில் தான் இந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது. அங்கே ஃபலூடா ஐஸ்கிரீம் விற்கும் போது கடைக்காரர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் மிக்ஸ விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
பகீர் வீடியோ: இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்புவதாக இருக்கிறது. அதில் ஐஸ்கிரீம் கடைக்காரர் சுய இன்பத்தில் ஈடுபட்டு, அதன் பிறகுத் தனது விந்தணுக்களை ஃபலூடாவில் கலக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் இது சென்றுள்ளது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் போலீசாரும் அந்த ஐஸ்கிரீம் கடைக்கு வந்துள்ளன. இதுபோல அசுத்தமான ஐஸ்கிரீம்களை பலர் உற்பத்தி செய்து, விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடும் நடவடிக்கை: மேலும், அவர் எங்கே ஐஸ்கிரீம்களை வாங்கினாரோ அங்கே சென்றும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அங்கே வைக்கப்பட்டிருந்த பழ சாலட்களை பரிசோதித்த அதிகாரிகள், அது கெட்டுப் போய் இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து சாலையோரம் உணவு விற்போருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு தயாரிக்கும் முறையில் தூய்மையை பேண வேண்டும் என்றும் சுகாதார செயல்முறைகளைக் கடைப்பிடிக்கத் தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications