Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது ஓயோ இல்ல.. இடைவெளி விட்டு கம்முனு வரனும்.. ஜோடிகளை எச்சரித்த ஹைதராபாத் கேப் ஓனர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மும்பை, டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட வளர்ந்த நகரங்களில் போக்குவரத்து மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. அதேபோல லவ் என்ற பெயரில் பொது இடங்களில் அத்துமீறும் ஜோடிகளின் அட்ராசிட்டியும் அதிகம் உள்ளது.

அந்தப் பிரச்னை தெலங்கானா தலைநகர் ஹைதாரபாத்தையும் விட்டு வைக்கவில்லை. இதில் கடுப்பான கேப் ஓனர் ஒருவர் ஜோடிகளுக்கு, இது ஓயோ இல்லை. எனவே ரொமான்ஸ் கூடாது என்று பகிங்கரமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதல் கடிதம் எழுதக் கூட தயக்கம் காட்டியவர்கள் 90 கிட்ஸ். ஆனால் 2கே கிட்ஸ் அப்படியல்ல.

cab couples

லவ், சேட்டிங், டேட்டிங், இன்ன பிற சமாசாரங்கள் எல்லாம் மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. தியேட்டர், மால், பீச், பார்க் என்று அனைத்து இடங்களிலும் ஜோடியாக லவ்வில் மூழ்கி வருகிறார்கள். காதல் தவறில்லை. ஆனால் காதல் என்ற பெயரில் தற்போது பலர் பொது இடங்களில் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சிறுசுகளும், இளசுகளும் எந்த தயக்கமும் இல்லாமல் ஓயோ லாட்ஜ்களுக்கு செல்வதாகவும் புகார் எழுந்து வருகிறது.

இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க யாருமே இல்லையா என 90 கிட்களும், அவர்களின் சீனியர்,சூப்பர் சீனியர்களும் உள்ளுக்குள் குமுறி கொண்டிருக்கின்றனர். அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக, ஏன் இல்லை. நான் கேட்கிறேன் என ஹைதரபாத் கேப் டிரைவர் செய்த ஒரு சம்பவம் முரட்டு வைரலாகி வருகிறது.

அவர் தன் கேப்பின் பின்பக்க இருக்கையில் ஒரு காகிதத்தில் ஒரு அறிவிப்பு எழுதி ஒட்டியுள்ளார். அதில் எச்சரிக்கை. ரொமான்ஸ் கூடாது. இது கேப். உங்களின் ப்ரைவேட் இடமோ அல்லது ஓயோவோ இல்லை. அதனால் சமூக இடைவெளிவிட்டு சற்று அமைதியாக இருங்கள் என்று ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

மாணவர்கள், ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கேப்களை கூட விட்டு வைக்காமல் செய்த சேட்டைகளில் கடுப்பாகி கேப் டிரைவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், கேப் பயணிகளுக்கு அவசியமான, கட்டுப்பாடான மெசேஜ் இது. டெல்லி மற்றும் பெங்களூரில் இதுபோன்ற வார்னிங் மெசேஜ்களை நிறைய பார்த்துள்ளோம். ஆனால் இவ்வளவு விரைவாக ஹைதராபாத்தில் எதிர்பார்க்கவில்லை. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் இதேபோல கேப் டிரைவர், பின்பக்க இருக்கையில் பயணிகளுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், நீங்கள் இந்த கேபின் ஓனர் இல்லை. இந்த கேப்பை ஓட்டி வருபவர் தான் ஓனர். அமைதியாக பேசி மரியாதை வாங்கிக் கொள்ளவும்.

கதவை மெதுவாக சாத்தவும். உங்களின் ஆட்டிட்யூட்களை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவும். அதை எங்களிடம் காட்டக் கூடாது. காரணம் எங்களுக்கு நீங்கள் எப்படியும் கூடுதல் பணம் கொடுக்க போவதில்லை. எங்களை பையா (அண்ணா) என்று அழைக்க கூடாது.

காரை வேகமாக ஓட்டு என்றும் சொல்லக் கூடாது. உரிய நேரத்தில் வந்து பழகுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது சமூகவலைதளங்களில் பயங்கர வைரலானது. அதேபோல ஹைதராபாத் கேப் டிரைவர் லவ் ஜோடிகளுக்கு எச்சரிக்கை விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+