உஸ்மானியா பல்கலை.யில் ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு- கேசிஆர் மீது காங். கடும் பாய்ச்சல்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர்களை சந்திக்க மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் அழுத்தத்தால்தான் உஸ்மானியா பல்கலைக் கழகம், ராகுல் காந்திக்கு அனுமதி தரவில்லை என சாடியுள்ளது காங்கிரஸ்.
தெலுங்கானா மாநில சட்டசபையில் 119 இடங்கள் உள்ளன. தெலுங்கானா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இப்போதே தெலுங்கானா தேர்தல் களம் அனலடிக்க தொடங்கி உள்ளது.

மிதப்பில் டிஆர்எஸ்
தெலுங்கானாவை பொறுத்தவரையில் ஆளும் டிஆர்எஸ் கட்சி தங்களை வீழ்த்த யாரும் இல்லை என்கிற மிதப்பில் உள்ளது. 2018 தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மொத்தம் 88 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 19 இடங்களும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சிக்கு 7 இடங்களும் கிடைத்தன. தெலுங்குதேசம் கட்சியால் தெலுங்கானாவில் சோபிக்க முடியவில்லை.

டிஆர்எஸ்- பிகே
இந்த நிலையில் தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்பதில் காங்கிரஸூம் பாஜகவும் வரிந்து கட்டுகின்றன. ஆனால் ஆளும் டிஆர்எஸ் கட்சியோ ஆட்சியை தக்க வைப்பதில் படுமுனைப்பாக இருக்கிறது. இதன் முதல் கட்டமாக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் அக்கட்சி ஒப்பந்தம் செய்து கொண்டது. இத்தனைக்கும் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸில் இணையக் கூடும் என கூறப்பட்ட நேரத்தில் டி.ஆர்.எஸுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது சர்ச்சையானது. பின்னர் காங்கிரஸிலேயே இணையவே இல்லை என அறிவித்தா பிரசாந்த் கிஷோர்.

தெலுங்கானாவில் ராகுல்
இந்த சூழலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடுத்தடுத்து தெலுங்கானாவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். மே 6,7 ஆகிய தேதிகளில் தெலுங்கானாவில் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, வாரங்கலில் 5 லட்சம் ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். அதன்பின்னர் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர்களை சந்தித்து உரையாட அனுமதி கேட்கப்பட்டிருந்தது. உஸ்மானியா பல்கலை கழகமானது தெலுங்கானா தனி மாநில பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உக்கிரமான பங்களிப்பை செய்திருந்தது. இதனால் பல்வேறு சர்ச்சைகளும் வெடித்திருந்தன. இதனால் ராகுல் காந்தி, மாணவர்களை சந்தித்து உரையாட அனுமதி மறுத்து உஸ்மானியா பல்கலை. நிர்வாகம்.

காங். பாய்ச்சல்
ஆனால் ராகுல் காந்தியை கண்டு அச்சப்பட்டுதான் ஆளும் டிஆர்எஸ் கட்சியும் முதல்வர் கேசிஆரும் உஸ்மானியா பல்கலைக் கழகத்துக்கு நெருக்கடி தந்து அனுமதி மறுக்க செய்தனர் என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. அத்துடன் ராகுல் காந்திக்கு அனுமதி வழங்க கோரி மாணவர் காங்கிரசார் போராட்டத்தையும் நடத்தினர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications