‘இந்தியா' கூட்டணிக்கு “ஷாக்”.. சல்லி சல்லியா நொறுக்கிட்டாரே ஒவைசி! பாஜகபோல் காங்கிரசும் வேண்டாமாமே

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அல்லாத மூன்றாவது அணி அமைய வேண்டும் என மஜ்லிஸ் கட்சி தலைவர் அசதுத்தீன் ஒவைசி தெரிவித்து உள்ளார்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், "எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி என்பது 3 வது அணியாக இருக்காது. காங்கிரஸ் இந்த நாட்டை 50 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறது. பாஜக சுமார் 18 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. இந்த நாட்டுக்கு காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அரசாங்கம் தேவைப்படுகிறது.

Owaisi said there should be a third party other than BJP and Congress

அப்போதுதான் இந்த நாட்டுக்கு ஏதாவது நல்லது நடக்கும். மஜ்லிஸ் கட்சி இந்தியா கூட்டணியில் சேராது. நாங்கள் எங்கள் வழியில் தேர்தலை எதிர்கொள்வோம். இந்தியா கூட்டணி என்பது பெரிய வாரிசுகளின் சங்கம். எங்கள் துன்புறுத்திய பணக்கார வாரிசும் அங்கு அமர்ந்து இருக்கிறது.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி, அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள கட்சிகள் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. இந்தியா கூட்டணியின் நோக்கம்தான் என்ன? யுஏபிஏ சட்டத்தை வலுப்படுத்த பாஜகவுக்கு இதே காங்கிரஸ் கட்சிதான் ஆதரவு கொடுத்தது.

காங்கிரஸ் கொடுத்த இந்த ஆதரவின் காரணமாக ஏராளமானோர் சிறையில் நலிவடைந்த நிலையில் கிடக்கிறார்கள். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமர் வேட்பாளர்களாக முன்னிலை படுத்தப்படுகின்றனர். ஆனால், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை அவர்கள் குறைத்து மதிப்பிட்டு உள்ளனர்.

சந்திரசேகர் ராவையும் அவரது அவரது திறன், தொலைநோக்கு பார்வை மற்றும் அரசியல் சாமர்த்தியத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். சந்திரசேகர் ராவ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக விவசாயிகள் தற்கொலை என்பது தெலுங்கானாவில் அதிகளவில் இருந்தது. தெலுங்கானாவில் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது. நீர் பாசனம் முறையாக இல்லை. மின்சார பிரச்சனையும் இல்லை.

ஆனால், தற்போது அந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு உள்ளன. தற்கொலைகளும் குறைந்து இருக்கின்றன. விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசமாக கிடைக்கிறது. இந்த நாட்டுக்கு இந்த பார்வை தேவைப்படுகிறது." என்றார். தெலுங்கானா சட்டசபை கட்டுமானத்திற்காக இடிக்கப்பட்ட மசூதி மீண்டும் அரசால் கட்டப்படுவை சுட்டிக்காட்டிய ஒவைசி, இதற்கு முன் இதுபோல் ஏதாவது நடந்து இருக்கிறதா என்று கேட்டார்.

Owaisi said there should be a third party other than BJP and Congress

"பாபர் மசூதியை மீண்டும் கட்டித் தருவோம் என்று சொன்ன காங்கிரஸ் கட்சி தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஏழை முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்காக நிதியுதவி வழங்கும் சந்திரசேகர் ராவ் அரசின் ஷாதி முபாரம் திட்டத்தை பாராட்டிய அவர், அரசு தொடங்கிய உண்டு உறைவிட பள்ளிகளில் மட்டும் 60 ஆயிரம் முஸ்லிம் மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.

மக்களுக்கு நன்மை தரும் அரசின் நலத்திட்டங்கள் எதுவாக இருந்தாலும் எங்கள் கட்சி ஆதரவளிக்கும். அதேசமயம் பாரத் ராஷ்டிரிய சமிதி போட்டியிடும் இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை வெற்றிபெறவும் முயற்சி செய்வோம்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+