காஷ்மீர் தாக்குதல்.. ஓவைசியா இப்படி பேசுவது.. பாஜக ஆதரவாளர்களே ஆடிப்போயிட்டாங்க
ஹைதராபாத்: காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மக்களை கொல்வதற்கு முன்பு அவர்களின் பெயர்களை கேட்டு கொன்றுள்ளனர். இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர். அவரை ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவுடன் ஒப்பிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பாஜகவினரே அவரை பாராட்டி வருவது அதிக கவனம் பெற்றுள்ளது.
கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது லஷ்கர் இ தொய்பாவின் அமைப்பின் துணைஅமைப்பாகும்.

இந்த தாக்குதலால் தற்போது இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே தான் பயங்கரவாத தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக பேசியுள்ளார். அதில் பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்டுள்ளார். ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை சொல்லாத வார்த்தையை அவர் பயன்படுத்தி பாகிஸ்தானை கடுமையாக சாடி உள்ளார். இதுதொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மக்களை கொல்வதற்கு முன்பு அவர்களின் பெயர்களை கேட்டு கொன்றுள்ளனர். இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளது. இந்த அயோக்கியர்கள் தாங்கள் செய்த செயலுக்காக நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த பயங்கரவாதிகள் எப்படி எல்லைகளை கடந்தனர்? இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? பஹல்காமுக்கு அவர்களால் வர முடிகிறது என்றால் இன்னும் ஸ்ரீநகரில் கூட அவர்களால் நுழைய முடியும். இதற்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. குறிப்பாக எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதனை பார்க்கும் பலரும் அசாதுதீன் ஓவைசியை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பாஜகவினர் கூட அவரை புகழ்ந்துள்ளதோடு, அவரது கருத்தை வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பிரணவ் என்பவர், ‛‛புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் ஓவைசி சரியாக பேசியிருந்தார்'' என்று கூறியுள்ளார். அதேபோல் சமீர் என்பவர், ‛‛ஓவைசியின் கருத்துக்கு எப்போதும் நான் உடன்படுவது இல்லை. ஆனால் இதற்கு உடன்படுகிறேன். எதிர்க்கட்சி தலைவராக அவர் தனது கருத்தை சிறப்பாக எடுத்து வைத்துள்ளார்'' என்று கூறியுள்ளார்.
ஜாபர் என்பவர், ‛‛ஓவைசிக்காவது முதுகெலும்பு என்பது உள்ளது. அவர் உண்மையை பேசி உள்ளார். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போல் பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளராக அவர் பேசவில்லை'' என்று கூறியுள்ளார். பாஜகவின் உறுப்பினர் என்று முகப்பு பக்க பயோவில் தெரிவித்து இருக்கும் ஆனந்த் கிருஷ்ணா என்பவர், ‛‛அசாதுதீன் ஓவைசியின் பேச்சை கவனித்தேன். அவர் முதுகெலும்பு இல்லாத ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவை விட சரியாகவும், தைரியமாகவும் பேசி உள்ளார்’’ என்று கூறியுள்ளார்.

ஷில்பா என்பவர், ‛‛ ‛மதத்தின் அடிப்படையில் இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பழிவாங்க வேண்டும்' என்று ஓவைசி கூறியுள்ளார். அவர் சில மதசார்பற்ற தலைவர்கள் என்று கூறி கொள்பவர்களை விட சிறப்பான கருத்தை தெரிவித்துள்ளார்'' என்று கூறியுள்ளார்.

சசிகுமார் என்பவர் கூறுகையில், ‛‛சில நேரம் ஓவைசி காங்கிரஸ் தலைவர்களை விட சிறப்பாக பேசுகிறார்'' என்று கூறியுள்ளார். இவர் தனது முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடியின் போட்டோவை வைத்துள்ளார்.

அதேபோல் குமார் மோகனிஷ் என்பவர், ‛‛நீங்கள் இதயத்தை வென்றுவிட்டீர்கள்''என்று கூறியுள்ளார். மேலும் Airfighter Enthusiast என்ற பெயரில் எக்ஸ் பக்கத்தில் செயல்பட்டு வருபவர் ‛‛சர்வதேச விவகாரங்களை பொறுத்தவரை நீங்கள் தான் உண்மையான இந்தியன். நான் பாஜக வாக்காளராக இருந்தாலும் கூட உங்களுக்கு சல்யூட் செய்கிறேன். நீங்கள் ராகுல் காந்தியை விட சிறந்த அரசியல்வாதி. அவர் ஒரு இடியட். சர்வதேச விவகாரங்களில்உங்களின் இந்த நிலைப்பாடு தொடரும் என்று நம்புகிறேன். நன்றி'' என்று கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications