பிரஸ்மீட்டில் சரமாரியாக தாக்கப்பட்ட தலைவர்.. தெலுங்கானாவில் அதிர்ச்சி - வீடியோ
ஹைதராபாத்: தெலுங்கானாவில் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட சிய பட்டியல் இன பரிக்ஷானா சமீதி தலைவரை குண்டர்கள் சரமாரியாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கானாவில் மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கான சமூக மற்றும் பழங்குடியின நலவாழ்வுத்துறை குருகுல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த பள்ளிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதுதொடர்பாக தேசிய பட்டியல் இன பரிரக்ஷானா சமீதி தலைவர் கர்னே ஸ்ரீசைலம் நேற்று மாலை ஹைதராபாத்தில் உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டியல் இனத்தவருக்கான பள்ளிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அவர் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

சரமாரி தாக்குதல்
கர்னே ஸ்ரீசைலம் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரஸ் கிளப்புக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், ஸ்ரீசைலத்தை சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஸ்ரீசைலம் தப்பித்து வெளியே ஓடினார்.
|
விடாமல் துரத்தி
ஆனாலும் அவரை விடாமல் துரத்திய அந்த கும்பல், சரமாரியாக கொலை வெறித்தாக்குதல் நடத்தியது. இந்தக் காட்சிகளை செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள் தங்களின் செல்போனிலும், கேமராக்களிலும் படம் பிடித்தனர்.

பேராசிரியர் மீது புகார்
அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. ஒரு அமைப்பின் தலைவர் மீது பிரஸ் மீட்டிலேயே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒஸ்மானியா பல்கலைக்கழக பேராசிரியர் அலெக்ஸாண்டர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஸ்ரீசைலம் புகார் அளித்துள்ளார்.

விசாரணை
ஆனால் ஸ்ரீசைலமும் அவரது நண்பர்களும் தங்களை தாக்கியதாலேயே தாங்கள் பதில் தாக்குதல் நடத்தியதாக பேராசிரியார் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications