'தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகள்.. எல்லா மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கிறது' பவண் கல்யாண் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் செயல்பட்டு வருவதாகப் பவண் கல்யாண் பாராட்டியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார்.

இவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பதிவிட்டுள்ள ட்வீட் இப்போது ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

பவண் கல்யாண்

பவண் கல்யாண்

49 வயதாகும் பவண் கல்யாண் தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர். சிரஞ்சீவியின் இளைய சகோதரரான இவர், ஜனா சேனா என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜனா சேனா கட்சிக்கு, இப்போது தெலங்கானா சட்டசபை ஒரு உறுப்பினர் உள்ளார்.

தமிழ்நாடு முதல்வருக்குப் பாராட்டு

தமிழ்நாடு முதல்வருக்குப் பாராட்டு

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் செயல்பட்டு வருவதாகப் பவண் கல்யாண் பாராட்டியுள்ளார். பவன் கல்யாணின் இந்த ட்வீட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அரசியல் செய்யக் கூடாது

அரசியல் செய்யக் கூடாது

இது குறித்து பவண் கல்யாண் தனது ட்விட்டரில், "அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்.

அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கம்

அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கம்

உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+