Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அதிர்ந்த ஆந்திரா.." சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக பவன் கல்யாண் செஞ்ச காரியம்! வெலவெலத்த போலீசார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஊழல் வழக்கு ஒன்றில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நள்ளிரவில் பவன் கல்யாண் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவின் முன்னாள் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு ஊழல் புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டார். கடந்த 2019 வரை ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு மீது சுமார் 300 கோடி ரூபாய் ஊழல் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.

 Pawan Kalyan suddenly lies on road and protest as police stops him meeting Chandrababu Naidu

இதற்காக அவருக்குக் கடந்த வெள்ளி நள்ளிரவில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருந்த போதிலும், எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பில் அவர் இருந்ததால் காலை 5.30 மணிக்கு பிறகே அவரை போலீசார் கைது செய்தனர்.

சந்திரபாபு நாயுடு கைது: கடந்த 2015-16இல் தொழில் முனைவோர் துறைக்கு ஆந்திர அரசு ரூ.360 கோடி ஒதுக்கிய நிலையில், அதில் தான் ஊழல் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரில் தான் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

அதன்படி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்குப் பவன் கல்யாண் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், சந்திரபாபு நாயுடு இப்போது விஜயவாடாவில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் பவன் கல்யாண் விஜயவாடாவுக்கு செல்ல முயன்றார்.

பவன் கல்யாண்: இதன் காரணமாக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் மற்றும் அதன் மூத்த தலைவர் நாதெண்டலா மனோகர் ஆகியோரை ஆந்திரப் பிரதேச போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். தடுப்பு காவலில் வைக்கப்பட்ட போதிலும் அவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினார்.

சந்திரபாபு நாயுடு கைதுக்குக் கண்டனம் தெரிவித்த பவன் கல்யாண் அவரை சந்திக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்காக அவர் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் விஜயவாடா வர இருந்தார். இருப்பினும், ஆந்திர அதிகாரிகள் அந்த விமானத்திற்கு அனுமதி தரவில்லை. இருப்பினும், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் சாலை மார்க்கமாக விஜயவாடா வந்தடைந்தார். இருப்பினும், சாலை மார்க்கமாக வரும் போது அவரது கான்வாய் என்டிஆர் மாவட்டத்தில் இரண்டு முறை தடுக்கப்பட்டது.

ரோட்டில் படுத்து போராட்டம்: அதன் பிறகு உடனடியாக வண்டியை நிறுத்திய அவர் விஜயவாடாவை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார். அவருடன் பல நூறு தொண்டர்கள் இருந்த நிலையில், அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் அவரை விஜயவாடாவை நோக்கிச் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பவன் கல்யாண் உடனடியாக அனுமஞ்சிப்பள்ளியில் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார்.

அங்கே சுற்றிலும் பல நூறு தொண்டர்கள் இருந்த நிலையில், நிலைமை கையை மீறி செல்லாமல் இருக்க போலீசார் அவரை தடுப்புக் காவலில் கைது செய்தனர். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதைத் தொடர்ந்து அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் விஜயவாடா அழைத்துச் செல்லப்பட்டனர். இது வெறும் தடுப்புக் காவல் தான் என்றும் அவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அதிகாரி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+