எல்லை மீறிய பெண் மருத்துவர்.. ஒரு டாக்டர் இப்படி செய்யலாமா? இப்போ பாவம் கம்பி எண்ணுகிறார்
ஹைதராபாத்: நமது நாட்டில் மருத்துவர்களைக் கிட்டத்தட்ட கடவுள் போலத் தான் பார்ப்பார்கள்.. பல நேரங்களில் உயிருக்குப் போராடும் நபரைத் திறம்பட மருத்துவர்களைக் காப்பாற்றுவார்கள். அதேநேரம் சில நேரம் மருத்துவர்களும் கூடச் செய்யக்கூடாத செயல்களைச் செய்து வம்பில் மாட்டுவார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
இந்தியாவில் மருத்துவர்களுக்கு எப்போதும் தனி மரியாதை இருக்கும். பிறப்பு முதல் எப்போதும் உடலுக்கு எதாவது என்றால் நாம் முதலில் மருத்துவரிடமே ஓடுவோம். எப்பாடுபட்டாவது மருத்துவர்களும் காப்பாற்றுவார்கள். ஆனால், சில நேரங்களில் மருத்துவர்களே கூட தவறான செயல்களைச் செய்யும் சம்பவங்களும் கூட நடக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

பெண் மருத்துவர் கைது
தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரே போதைப்பொருள் வாங்க முயன்றுள்ளார். ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை அவர் வாங்க முயன்ற நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர்.
யார் அவர்?
ஹைதராபாத்தில் உள்ள மிகப் பெரிய தனியார் மருத்துவமனையில் சிஇஓவாக இந்தப் பெண் மருத்துவர் பணியாற்றி வந்திருக்கிறார். இருப்பினும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இவர் மும்பையைச் சேர்ந்த சப்ளையர் வான்ஷ் தக்கர் என்பவரிடம் இருந்த கூரியர் மூலம் கோகைன் போதைப் பொருளை வாங்க முயன்ற போது கைது செய்யப்பட்டார். போதைப் பொருளை வானிஷின் உதவியாளரான பாலகிருஷ்ணா கொடுக்க வந்த நிலையில், இருவரையும் சேர்த்தே போலீசார் கைது செய்தனர்.
34 வயதான அந்தப் பெண் மருத்துவர் வாட்ஸ்அப் மூலம் வானிஷை தொடர்பு கொண்டுள்ளார். மேலும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள கோகைனை ஆர்டரும் செய்துள்ளார். ஆன்லைன் மூலம் மருத்துவர் பணத்தை அனுப்பிய பிறகே போதைப் பொருளை அனுப்பியுள்ளனர்.
போலீஸ் சொல்வது என்ன?
இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி வெங்கண்ணா கூறுகையில், "மும்பையைச் சேர்ந்த வானிஷ் என்பவரிடம் இருந்து இந்த மருத்துவர் போதைப் பொருளை வாங்க முயன்றுள்ளார். வானிஷ் அந்தப் பெண் மருத்துவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. பணம் அனுப்பியவுடன் பாலகிருஷ்ணா என்ற நபர் போதைப் பொருளை எடுத்து வந்து ராயதுர்க் பகுதியில் கொடுத்துள்ளார்.
எங்களுக்கு இது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தது. சரியாக டிராக் செய்து அவர்களை கையும் களவுமாகப் பிடித்தோம். அப்போது அவர்களிடம் இருந்து ரூ.10,000 ரொக்கம், 53 கிராம் கோகைன் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாகப் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
போலீஸ் விசாரணை
போலீசார் விசாரணையில் போதைப் பொருளுக்கு மட்டும் சுமார் 70 லட்ச ரூபாய் வரை செலவு செய்ததை அந்தப் பெண் மருத்துவர் ஒப்புக்கொண்டார். அவர் வேறு யாரிடமாவது இதற்கு முன்பு போதைப் பொருளை வாங்கியுள்ளாரா.. இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரு டாக்டர் இப்படி செய்யலாமா
போதைப் பொருள் பயன்பாடு என்பது உடலை மொத்தமாக நாசம் செய்துவிடும். மேலும், பல்வேறு உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இதனால் போதைப் பொருளை நிச்சயம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதைப் பல்வேறு மருத்துவர்கள் கூறி வருகிறார். ஆனால், இங்கு மருத்துவரை எல்லை மீறி போதைப் பொருளை வாங்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications