செமி பைனல் நாள் குறிச்சாச்சு..தெலுங்கானாவை மீண்டும் ஆள்வாரா சந்திரசேகர் ராவ்? BRS பலம் பலவீனம் என்ன?
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்திற்கான சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு ஆட்சியில் உள்ள சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சியின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்று விரிவாக பார்ப்போம்.
தெலுங்கானா தேர்தல்: ஆந்திராவில் இருந்து பிரித்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிகாலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ள நிலையில் நேற்று ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் வெற்றிபெறும் முனைப்புடன் ஆளும் பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சிக்கு இம்முறை காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் சந்திர சேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் ஆட்சிக்கு வருமா? அக்கட்சிக்கு இருக்கும் பலமும் பலவீனமும் என்ன? விரிவாக காண்போம்.
பி.ஆர்.எஸ் பலம்:
- ஆந்திராவில் இருந்து பிரித்து தெலங்கானாவிற்கு மாநில அந்தஸ்தை போராடி பெற்றுத் தந்தவர் என்ற பெருமை முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு உள்ளது.
- அம்மாநிலத்தில் பி.ஆர்.எஸ் அரசு செயல்படுத்திய ரித்து பந்து மற்றும் கேசிஆர் கிட் போன்ற அரசு திட்டங்கள் நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளன.
- தெலுங்கானாவில் சந்திரசேகர் ஆட்சியில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தில் பல்வேறு நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.
- தேர்தலில் போட்டியிடும் பி.ஆர்.எஸ் கட்சியின் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் அட்டவணை வெளியாவதற்கு முன்பே அறிவித்து பிரச்சார பணிகளை தொடங்கிவிட்டதால் மக்கள் மனதில் அவர்கள் மற்ற கட்சிகளைவிட அதிகம் பரிட்சையமாகி உள்ளனர்.
- முதலீட்டாளர்களுக்கு சாதகமானதாக பிஆர்எஸ் அரசு அறியப்படுகிறது. மேலும் மாநிலம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் அதிக முதலீடுகளை அம்மாநில அரசு ஈர்த்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி பெருகி உள்ளது.
- புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாக இருந்தாலும் சந்திரசேகர் ராவ் தெலுங்கானாவில் ஒரு நிலையான அரசை வழிநடத்தி உள்ளார். இதன் காரணமாக அம்மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக மக்கள் பாராட்டுகின்றனர்.
- மாநில மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்ட தலைநகர் ஐதராபாத்தை முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான கேடி ராமாராவின் நேரடி மேற்பார்வையில் உலகளாவிய தரம் கொண்ட நகரமாக மேம்படுத்தி வருகிறார்.
- கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிஆர்எஸ் கட்சியின் அமைப்பு ரீதியான உள்கட்டமைப்புகள் அடிமட்டத்தில் வலுப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
- பிஆர்எஸ் அதிக நிதியை வைத்திருக்கும் கட்சி என்பதால், தேர்தல் பணிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாது.
- ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி கூட்டணியில் உள்ளதால் சிறுபான்மை சமுதாய வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பிஆர்எஸ் கட்சிக்கு விழும்.
பலவீனம்:
- கட்சி வலுவாக இருந்தால் பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதியிலும், கட்சிக்கு உள்ளேயும் எதிர்ப்பு அலையே உள்ளது.
- பல தொகுதிகளில் கட்சிக்கு உள்ளேயே கருத்து வேறுபாடுகள் பூதாகரமாக இருப்பது தேர்தல் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
- சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் அரசு மீது குடும்ப ஆட்சி என்ற விமர்சனம் உள்ளது.
- முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரச்சினையாக எழுப்பலாம்.
- தென் மாநிலமான கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற அமோக வெற்றி பெற்றது அரசியல் சூழலை மாற்றியுள்ளது. இது தெலுங்கானாவில் எதிரொலிக்க வாய்ப்பு அதிகம்.
- வட மாநிலங்களை போல பாஜக தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வலுவாக இல்லாத காரணத்தால், ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைப்பவர்களின் வாக்குககள் பிரியாமல், தனி பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அவை மொத்தமாக விழுந்தால் பிஆர்எஸ் கட்சிக்கு சிக்கலாக அமையும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications